கோவிட்-19 வைரஸை வேண்டுமென்றே பரப்பிய சீனா!  சதியை அம்பலப்படுத்திய ஆளும்கட்சி முன்னாள் நிர்வாகி!

0
44

கொரோனா குறித்து உலகம் அறிந்துகொள்வதற்கு இரண்டு மாதங்கள் முன்பே, சீனாவின் வுஹானில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் வேண்டுமென்றே கொரோனா பரப்பப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகியான Wei Jingsheng என்பவர்தான் இந்த அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் நடத்தப்பட்ட சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிதான் முதன்முதலில் கொரோனா பரவகாரணமாக இருந்த super spreader நிகழ்ச்சி என்கிறார் அவர். குறிப்பாக வூகானில் நடந்த தடகளப் போட்டியின்போதுதான், வேண்டுமென்றே சீனா, கோவிட்-19 வைரஸை பரப்பியது என Jingsheng கூறுகிறார்.

Also Readகோவிட் பரவலுக்கு முன்பே தடுப்பூசி கண்டுபிடித்த சீனா! வூஹான் ஆய்வகத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டது அம்பலம்!

போட்டியில் கலந்துகொள்வதற்காக சீனா வந்திருந்த 9,000 சர்வதேச விளையாட்டு வீரர்கள், மர்ம நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அது தற்செயலாக நடந்தது அல்ல; ராணுவ விளையாட்டுப் போட்டிகளின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வருவார்கள் என்பதால், சீன அரசு அதை கொரோனா வைரஸைப் பரப்புவதற்கு உகந்த தருணமாக அதை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என தான் கருதுவதாக அவர் தெரிவிக்கிறார்.

அந்த நேரத்தில் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சோதனைகளை சீனா செய்துகொண்டிருந்தது குறித்து தனக்கு தெரியும் என்று கூறியுள்ள Jingsheng, அவற்றை சீனா பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்கிறார். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ட்ரம்ப் அரசிலிருந்த மூத்த அதிகாரிகளிடம் இது குறித்து விவரித்தும், அதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று Jingsheng கூறியுள்ளார்

அமெரிக்க மாகாணத் துறைக்கான முன்னாள் சீன ஆலோசகரான Miles Yu என்பவரும் Jingsheng கருத்து சரி என்று கூறியிருக்கிறார்.பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு அந்த போட்டிகளின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், கொரோனா அறிகுறிகள் அவர்களுக்கு காணப்பட்டும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் Miles Yu கூறுகிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry