இலங்கை நெருக்கடியின் உண்மை பின்னணி! ராஜபக்சே குடும்பத்தில் பிளவு! வேல்ஸ் மீடியா எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்!

0
90

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நீடிக்கிறது.

இலங்கை அரசு அழிவுக்காக வாங்கிய கடனே இந்த நிலைக்குக் காரணம் என்று அந்நாட்டு முன்னாள் எம்.பி.யும், EPRLF(Eelam People’s Revolutionary Liberation Front) எனப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். வேல்ஸ் மீடியாவுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், “இலங்கை அரசு வாங்கியுள்ள 55 பில்லியன் டாலர் கடன் அழிவுக்கானது.

Also Read : நான் செய்தது தவறுதான்! ஆனாலும் பதவியில் இருந்து விலகமாட்டேன்! இலங்கை அதிபர் திட்டவட்டம்!

இலங்கை திவாலாகிவிட்டது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 345 ஆக உள்ளது. சீனா 2 பில்லியன் டாலர் கடன் தருவதாகக் கூறுகிறது. அதில் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு 1 பில்லியன் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மருந்துகள் விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.5000க்கும் மேல் விற்கிறது. அரசை நடத்தும் தகுதியை ராஜபக்ச சகோதரர்கள் இழந்துவிட்டனர். தற்போதுள்ளது போன்ற நெருக்கடிகள் தமிழர்களான எங்களுக்கு புதிதல்ல.” என்று கூறியுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் முழு நேர்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry