தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!

0
308

காலைச் சிற்றுண்டித் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை முதல்வர் மதுரையில் தொடக்கி வைத்தார்.

Also Read : வேகமாகப் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல்! எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!

சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது ஓரிரு வாய் சாப்பிட்ட முதல்வர், அருகிலிருந்த குழந்தைக்கு ஊட்டிவிட்டார். பின்னர் உணவிலேயே அவர் கைகழுவினார். இதை குழந்தைகள் விநோதமாக பார்த்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் உருப்படியான திட்டத்தைச் செயல்படுத்துவது கிடையாது. ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து பெயர் சூட்டுவிழாவை மட்டும் பிரமாதமாக இருக்கும். ஏன் என்றால் முதல்வரின் பக்கத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இருக்கிறார். நான் அமைச்சராக இருந்தபோது எனக்கு துறை செயலாளராக இருந்துள்ளார். அவர் கைவண்ணம் எல்லாம் எனக்குத் தெரியும். அவர் எழுதித் தருவதை இவர் முதல்வர் படிப்பார்.

திட்டத்தைத் துவக்கிவைத்த முதல்வருக்கு புதிய எவர்சில்வர் பிளேட். புதிய ஸ்பூன் அனைத்தும் அளித்தார்கள். சாப்பாடு போட்டவுடன் அதனை முழுமையாகச் சாப்பிடவேண்டும் அல்லவா. இரண்டுவாய்தான் எடுத்துவைத்திருப்பார். அதற்குள் அந்த தட்டிலையே கையை கழுவிவிட்டார். முதலமைச்சர் தொடங்கிவைத்த திட்டத்தையே முதலமைச்சரே அவமானப்படுத்துகின்ற நிலை உள்ளது.” இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry