பட்டம் பெறவந்த பட்டியலின மாணவன் ஜட்டிக்குள் கைவிட்டு…! அரை நிர்வாணமாக்கி அறையில் பூட்டி சித்ரவதை..! வழக்கில் சிக்கும் போலீஸார்!

0
164

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில் ‘ஆளுநருக்கு பாதுகாப்பு’ என்ற பெயரில், பாதுகாப்பு பணியில் இருந்த சில காவலர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவரும், பட்டம் பெற வந்தவருமான அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அறையில் பூட்டி வைத்து அவமானப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். அரவிந்தசாமி அவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2021ஆம் ஆண்டு அரவிந்தசாமி எம்ஏ., எம்.பில் (MA M.Phil) முடித்து விட்டு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் (Mass Communication) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Also Read : தமிழ்ப் புத்தாண்டை குறிப்பிடாமல் அமைச்சர் வெளியிட்ட கல்வி நாட்காட்டியால் சர்ச்சை! திட்டமிட்டு புறக்கணிப்பு என தமிழ் ஆர்வலர்கள் புகார்!

இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால சோழன் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைத்து மாணவர்களும், காலை 8 மணிக்கு அரங்கத்திற்குள் வரவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து சக மாணவர்களுடன், அரவிந்தசாமி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அரங்கத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது, ஆளுநருக்கு எதிராக கருப்பு பேட்ச் மற்றும் கருப்பு மாஸ்க் அணிந்து அரவிந்தசாமி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர், அவரை அடுத்தடுத்து சோதனை செய்ததுடன், அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அவரது ஆணுறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்துள்ளனர். மேலும், தனி அறையில் அடைத்து வைத்திருந்துள்ளனர்.

Also Read : கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலி வேலை செய்வதா திராவிட மாடல்? காவியைப் பார்த்து காப்பி அடிக்கலாமா? நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆவேசம்!

இது குறித்து வேல்ஸ் மீடியாவிடம் பேசிய அரவிந்தசாமி, காலை சரியாக 9.15க்கு முதலில் காவலர்கள் சிலர் வந்து என்னை விசாரித்துச் சென்றனர். பின்னர் மாநில உளவுத்துறை (எஸ்பிசிஐடி) அதிகாரிகள், எனக்கு தலையில் சுருட்டை முடி என்பதால், எனது தலைக்குள் கை விரல்களை விட்டு தூக்கிப் பார்த்து எதுவும் இருக்கிறதா என கேட்டுக் கொண்டே எனது கைக்குட்டையை எடுத்து உதறிப் பார்த்தனர். பிறகு அத்தனை மாணவர்கள் மத்தியில் என்னை அவர்கள் சோதனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீஸார் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறை மின்சார கட்டுப்பாட்டு அறை என்பதால் மிகவும் வெப்பமாக இருந்தது. எனது மேல் சட்டை மற்றும் பேண்டை கழற்றச் செய்தனர். நான் கருப்பு நிறத்தில் உள்ளாடைகள் அணிந்திருப்பதை பார்த்த காவல்துறையினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்தது போல் தெரிகிறதே என கேட்டு என் ஆணுறுப்பிற்கு மேல் கையை வைத்து சோதனை செய்தார்கள்,” என்று அரவிந்தசாமி கூறினார்.

மேலும் பேசிய அரவிந்தசாமி, ”குடும்பத்துடன் பட்டம் பெற வந்துள்ள நான் எப்படி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றேன். ஆனால் அதை ஏற்க மறுத்த போலீஸார், பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல போராட்டங்களை செய்ததால் அளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கூறி அந்த அறையிலேயே என்னை இருக்கச் செய்தனர்.

காவல் துறையினர் சொல்வதை போல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பலமுறை குடிதண்ணீர், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்காக இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து மனுக்களை அளித்துள்ளேன். ஆனால், போராட்டம் நடத்தியதில்லை.
பின்னர் சரியாக 12:10க்கு என்னை டிஐஜி சிறப்பு பிரிவு போலீசார் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை அதே அறைக்குள் பிற்பகல் 1:30 மணி வரை பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து என்னை ஒரு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லும்போது, நான் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார்கள் என குரல் எழுப்பினேன். உடனடியாக இடதுசாரி கட்சியினர் ஒன்றிணைந்து காவல்துறையிடம் என்னை அழைத்துச் செல்வதற்கு காரணம் கேட்டு அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையில் மாலையில் நான் விடுவிக்கப்பட்டேன்.

Also Read : சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

பின்னர் பல்கலைக்கழகத்திற்கு வந்து என்னுடைய பட்டத்தை கேட்கும்போது நான் உட்பட என்னுடன் சேர்ந்து நான்கு மாணவிகளின் பட்டத்தை காணவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
நான் படித்த பாடப்பிரிவு துறையின் ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, பல்கலைக்கழக தேர்வு மைய துறையிடம் இருந்து பட்டத்தை வாங்கிக் கொடுத்தனர்.

எனது குடும்பத்துடன் பட்டம் வாங்க வந்த என்னை தனி அறையில் அடைத்து வைத்து சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றால் கூட, மூன்று காவலர்களை உடன் அனுப்பி சிறுநீர் கழிக்கும் வரை அருகிலேயே இருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இது எனக்கு மிகவும் மன வேதனையை அளித்துள்ளது.
இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளேன். செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று அரவிந்தசாமி தெரிவித்தார்.

Also Read : தமிழ்நாட்டை பல வெப்ப அலைகள் தாக்கும் ஆபத்து! ஒவ்வொரு முறையும் ஒரு வாரம் வரை நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரிக்கை!

மாணவர் அரவிந்தசாமி பட்டமளிப்பு அரங்கில் அமர்ந்திருந்ததாகவும், அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அழைத்துச் சென்றதாகவும், நிகழ்ச்சி முடிந்ததற்கு பின்னர் ஆசிரியர் சொல்லித்தான் துணை வேந்தர் கவனத்திற்கு வந்ததாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் கூறுகிறது.
மேலும், காவல்துறை சார்பில் எவ்வித முன்னறிவிப்பும் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படவில்லை. எந்தவொரு மாணவரையும் வெளியேற்றுமாறு பல்கலைக்கழகம் உத்தரவிடவில்லை. மாணவர் அரவிந்தசாமியை அரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல எந்த அனுமதியும் போலீசார் பல்கலைக்கழகத்திடம் கேட்கவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஆளுநர் பாதுகாப்பு என்ற பெயரில் பட்டியலின மாணவரை போலீஸார் அடக்குமுறைக்கு உள்ளாக்கி சித்ரவதை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்தச் சம்பவம் பற்றி கண்டனம் தெரிவிக்காதது மாணவர் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Featured Videos from Vels Media

பிஜேபியை குஷிப்படுத்தவே தொழிலாளர் விரோத சட்டத்திருத்தம்! | Savithri Kannan Interview 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry