1000 குடமுழுக்குகளை அரசு நடத்தியுள்ளதா? முதல்வர் கூறுவதில் உண்மையில்லை என பாஜக விமர்சனம்! ஆலயங்களை விட்டு அரசு வெளியேறவும் வலியுறுத்தல்!

0
29
TN Govt. Invitation & TN BJP Leader Narayanan Tirupathi

சென்னையில், மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 10-ந்தேதி) நடைபெற்றது. தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் ஆயிரமாவது குடமுழுக்கு இது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் திமுக அரசு மீட்டது என்றும், 1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை என்றும் இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் பெருமை கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .

மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவில் குடமுழுக்கு

ஆனால், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிக்கை. கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது குத்தகைதாரர்களிடமிருந்து மீட்டது உயர் நீதிமன்றம் தானேயன்றி அரசு அல்ல. பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்குகளில் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே கோவில் சொத்துக்கள் மீண்டும் கோவில்களின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன என்பதே உண்மை.

மேலும், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறைக்கு எந்தவிதமான சட்டரீதியான உரிமையும் இல்லை. அதற்கான உரிமை அந்தந்த கோவில்களின் நிர்வாகத்துக்கு மட்டுமே உண்டு. இந்து அறநிலையத்துறை என்பது, கோவில் நிர்வாகங்களில் குறைகள் இருந்தால், குறைகளை களைய மேற்பார்வையிடும் அமைப்பு தானே தவிர, கோவில்களை நிர்வாகம் செய்யும் துறை அல்ல என்றே சட்டம் சொல்கிறது.

அப்படியிருக்க கும்பாபிஷேங்களை நடத்துவதற்கு ஹிந்து அறநிலையத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை எனும் போது, அவற்றை நிகழ்த்துவதே சட்ட விரோதம். அரசு மற்றும் ஹிந்து அறநிலையத்துறை கோவில்களை விட்டு வெளியேறினால் மட்டுமே இறை நம்பிக்கையாளர்கள் போற்றுவர். அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு.” இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பதிவு | Screen Grab

இதனிடையே, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரும், சமூக செயல்பாட்டாளருமான டி.ஆர். ரமேஷ், தனது எக்ஸ் பதிவில், “அன்புள்ள முதல்வர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மேலான கவனத்திற்கு, வணக்கம்.

தங்களின் டிவிட்டர் பதிவு தமிழகக் கோயில்களின் உண்மையான நிலையை காண்பிப்பதாக இருந்தால் முதல் மகிழ்ச்சி எனக்குத் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, தங்களின் இந்தப் பதிவு உண்மை நிலையில் இருந்து வெகு தொலைவு விலகி இருக்கிறது.

உங்களுக்கு அறநிலையத் துறை குறித்த உண்மைகளை அமைச்சரும் சொல்வதில்லை, அதிகாரிகளும் சொல்வதில்லை என்பது இப்பொழுது நன்றாகத் தெரிகிறது. நான் சொல்ல வரும் விடயங்கள் எல்லாமே ஆதாரங்களுடன் தாம் சொல்கிறேன். கடந்த 40 -50 ஆண்டுகளாக அறநிலையத்துறை இந்துக் கோயில்களையும், கட்டளைகளையும் மிக மோசமாக நிர்வாகம் செய்து வருகிறது என்பதே உண்மை.

1986ல் கோயில்கள், திருமடங்கள், கட்டளைகளுக்கு 5.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன. தற்போது 4.78 லட்சம் ஏக்கர்கள் தாம் உள்ளன என்று துறை சொல்கிறது. 47,000 ஏக்கர் காணவில்லை. இதை நீதிமன்றமே பதிவு செய்துள்ளது.

மிக மிகக் குறைந்த வருவாயே கோயில் நிலங்களில் இருந்து அறநிலையத்துறையால் ஈட்டப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ரூ.5000 கோடி மேல் வசூலிப்பதில்லை. குத்தகை தொகை பாக்கி என்பது ரூ. 50,000 கோடிக்கு மேல் என்று அறநிலையத்துறையே நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது. இது மிக மோசமான நிலை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.

12 வருடங்களாக அறங்காவலர்களை நியமனம் செய்யவில்லை. தற்போது செய்யும் நியமனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அரசியல்வாதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோயில் நிலங்களக்கு பல இடங்களில் மிக மோசமான, மிகக் குறைந்த தொகை, ஆண்டு குத்தகையாக வசூல் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 கூட வசூல் செய்யமல் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது குறித்து துறை தணிக்கை அதிகாரிகள் பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகின்றனர்.

Also Read : #BharatVsIndia ஆங்கிலேயர்கள் பாரதத்தை ‘இந்தியா’ என்று ஏன் மாற்றினார்கள்? அறிய வேண்டிய வரலாற்றுப் பின்னணி! Explainer!

வேதாரண்யம் கோயில் நிலங்கள் 2400 ஏக்கருக்கு, வருடத்திற்கு ஓர் ஏக்கருக்கு ரூ.2.00 மட்டுமே மத்திய அரசின் உப்பு கழகம் கொடுத்து வருகிறது. இதைக் கண்டிப்பாக தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ஆந்திர அரசு முன்பு இத்தகைய நிரந்தரக் குத்தகைகளைச் சட்டப் பூர்வமாக ரத்து செய்தது. அப்படி ரத்து செய்தது சரி என்று உச்ச நீதிமன்றமும் சொல்லியுள்ளது. தாங்கள் – முன் தேதியிட்டு, உண்மையான – சந்தை குத்தகை தொகையை வசூலிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசுக் கழகம் என்பதற்காக வசூலிக்காமல் விட்டுவிடக் கூடாது.

கோயில் பணத்தை எடுத்து தங்கள் துறை செலவுகளை சட்ட விரோதமாக, கோயில் விரோதமாக அறநிலையத்துறை செய்து வருகிறது. நான் தொடுத்த வழக்கில், கோயில் நிலங்களில், பல கோயிலில் இருந்து சட்ட விரோதமாக எடுத்த நிதியைக் கொண்டு – துறை அலுவலகங்கள் கட்டியதை ஒத்துக் கொண்டு பணத்தை திரும்பத் தருவதாகச் சொல்லியுள்ளது. பணத்தை வட்டியுடன் திரும்பத் தர வேண்டும். பணத்தை எடுத்த முன்னாள்/இந்நாள் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட வேண்டும்.

கோயில் பணத்தை எடுத்து துறை அதிகாரிகளுக்கு ஈப்பு, இன்னோவா வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அமைச்சருக்காக 3 இன்னோவா கோயில் பணத்தில் வாங்கப்பட்டன. இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Read : திரித்துப் பேசும் உதயநிதி, திராவிட இயக்கம்! தோல் சீலைப் போராட்டம், ஆலயப் பிரவேசத்தில் இதுதான் நடந்தது! உண்மையை உடைக்கும் KSR!

கோயில் வருமானத்தில் 12% நிர்வாகக் கட்டணமாகவும், 4% தணிக்கைக் கட்டணமாகவும் வருடந்தோறும் சுமார் ரூ. 400 கோடி அறநிலையத்துறை எடுக்கிறது. இது மிக அநியாய கட்டணம். காரணம், துறையின் ஆண்டு நிர்வாகச் செலவு ரூ. 120 கோடி மட்டுமே. ஒரு செக்குலர் அரசு கோயில்களை வைத்து எப்படி லாபம் சம்பாதிக்கலாம்?

தணிக்கைக் கட்டணம் 4% என்பது உலகில் எங்கும் காண முடியாத விசித்திரம், அநியாயம். இது வெளித் தணிக்கை இல்லை – சட்ட விரோத உள் தணிக்கை என்று நான் வழக்கு போட்ட பிறகு, அறநிலையத்துறையில் இருந்த தணிக்கைப் பிரிவைத் தூக்கி நிதித் துறைக்கு இடம் பெயர்த்து வைத்துள்ளனர். இது வெளித் தணிக்கை ஆகிவிடாது. தணிக்கையாளகர்கள் கோயில் நிர்வாகத்தில் (அறநிலையத்துறை நிர்வாகத்தில்) 1986ம் ஆண்டு முதல் 18 லட்சம் தணிக்கை குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இவை தீர்க்கப்படாமல் இன்று வரை உள்ளன. இது மிக மிக மோசமான நிர்வாகத்தின் அடையாளம்.

Also Read : சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

44,000 கோயில்களில், 628 கோயில்களில் செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்வதாக துறை சொல்கிறது. 628 கோயில்களில் 400க்கு மேற்பட்ட கோயில்களில் செயல் அலுவலர்கள், ஆணையரால் – தக்க சட்டப் பிரிவின் கீழ் நியமனம் செய்த உத்தரவுகளே இல்லை. இது குறித்து சுமார் 120 கோயில்கள் விஷயமாக வழக்குகள் தாக்கல் செய்துள்ளேன் – ஒரு கோயிலின் உத்தரவுக் கூட துறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் காட்ட இயலவில்லை. இது மிகப் பெரிய சட்ட மோசடி இல்லையா? இதைப் பற்றி ஒரு வெளித் தணிக்கைக்குத் தாங்கள் உத்தரவிட்டால்தான் துறை அதிகாரிகள் தொடர்ந்து பொய் சொல்வது நன்றாகத் தெரியவரும்.

கோயில்கள் நிர்வாகம் சம்மந்தமாக துறை அதிகாரிகள் செய்யும் இன்னும் பல மோசடிகளை என்னால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். தாங்கள் வாய்ப்பளித்தால் செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன். உண்மையை அறிய ஓர் அப்பழுக்கற்ற நீதிபதி கொண்டு தாங்கள் விசாரிக்க வேண்டுகிறேன்.”இவ்வாறு டி.ஆர். ரமேஷ் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry