கொரோனா மூன்றாவது அலை குறித்து டெல்லி எய்ம்ஸ் ஆய்வு! குழந்தைகளை அதிகம் பாதிக்காது என தகவல்! 

0
96

கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவை தாக்கியுள்ளது. நாள் தோறும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வந்த சூழலில், தற்போது இரண்டாவது அலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், கொரோனா 3-வது அலை நவம்பரில் தாக்கக் கூடும் எனவும், இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்தனர்.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை மருத்துவர்கள் தயாராக இருப்பதுடன், குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாக தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். மொத்தம் 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 2 முதல் 15 வயது வரையிலான 700 குழந்தைகள், 18 வயதிற்கு மேற்பட்ட 3000க்கும் அதிகமானோர் என மொத்தம் 4500 பேர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

அதில், குழந்தைகளிடம் செரோ அளவு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. குழந்தைகளிடம் 55.7 சதவீதமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் 63.5 சதவீதமாகவும் செரோ அளவு இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செரோ விகிதம் அதிகமாக இருப்பதால், கொரோனா 3-வது அலை ஏற்பட்டாலும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry