பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சாவுமணி அடித்த வீரன் வாஞ்சிநாதன்! போஸுக்கு முன்னோடியாய் ஆங்கிலேயர்களை அலறவிட்ட வரலாறு!

0
452

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜூன் 17, 1911 அன்று மிக முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

யார் இந்த வாஞ்சிநாதன்?

1886ஆம் ஆண்டு செங்கோட்டையைச் சேர்ந்த ரகுபதி அய்யருக்கு மகனாக பிறந்தவர்தான் சங்கரன் என்கிற வாஞ்சிநாதன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்த அவர்,  திருவனந்தபுரம், மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.. பட்டம் பெற்றார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூரில் வனக் காவலாராகவும் பணியாற்றினார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மீது கோபம் கொண்டிருந்த அவர், ..சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு, அரசு வேலையை துறந்து சுதந்திரப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடுவது ஆகியவை அவரது சுதந்திர வேட்கையை அதிகரித்துள்ளது.

ராபர்ட் வில்லியம் டிஎஸ்கோர் ஆஷ்

அயர்லாந்தில் பிறந்த ராபர்ட் வில்லியம் டிஎஸ்கோர் ஆஷ், 1895 டிசம்பர் 4-ந் தேதி அரசுப் பணிக்காக இந்தியா வருகிறார். 1907-ல் திருநெல்வேலியின் ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட அவர், 1908, பிப்ரவரி 17-ல் தான் பணியில் சேர்ந்தார்.  17 ஜூன் 1911, காலையில் ரயில் பயணத்தில் ஆஷும், அவரின் காதல் மனைவி மேரியும், கொடைக்கானலுக்கு தங்களது பிள்ளைகளை பார்ப்பதற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்.

சரியாக 10.38க்கு மணியாச்சி சந்திப்பை ரயில் நெருங்கியது. கிராசிங் ரயிலுக்கு காத்திருந்தது ஆஷ் பயணப்பட்ட வண்டி. முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தனர் ஆஷ் தம்பதியினர். அந்த சமயம், குடுமி வைத்து நல்ல மிடுக்குடனும் பச்சை கோட் அணிந்த வாஞ்சிநாதனும், மாடசாமிப் பிள்ளையும் முதல் வகுப்பு பெட்டியருகில் வேகமாக சென்றனர்.

தன்னுடைய பெல்ஜியத் தானியங்கித் துப்பாக்கியால் நொடியில் ஆஷ் துரையின் நெஞ்சில் 25 வயதான் வாஞ்சிநாதன் சுடுகிறார். ஆஷ் சுயநினைவினை இழந்த நிலையில், ரயில் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்புகிறது. கங்கைகொண்டான் அருகே செல்லும் போது ஆஷ் துரை உயிர் பிரிந்துவிட்டது. மாடசாமிப் பிள்ளை தப்பிவிட, வெள்ளைக்காரனிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக அந்த ரயில் நிலையத்தின் கழிவறையில் துப்பாக்கிக் குண்டால் வாஞ்சிநாதன் தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார்.

ஆஷ்துரையை கொல்லக் காரணம் என்ன?

வஉசிக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளே ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொல்ல்க் காரணம். தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆஷ்துரையை தீர்த்துக்கட்டுவது பற்றி அவர் விவாதித்தார். இறுதியில் யார் சுட்டுகொல்வது என்பதில் போட்டி ஏற்பட, சீட்டு குலுக்கிப்போட்டதில், வாஞ்சிநாதன் பெயர் வந்துள்ளது. பாண்டிச்சேரியில் வவேசு ஐயரிடமும், பரோடாவிலும் அவர் ஆயுதப்பயிற்சி எடுத்துள்ளார்.    

வாஞ்சிநாதன் கடிதம்

சுதந்திரப் போராட்டத்திற்காக தன் உயிரை விட்ட வாஞ்சியின் உடல் பிரேத பரிசோதனைக்கு செல்கிறது. அப்போது அவரின் சட்டையில் 2 காகிதம் இருந்தது. ஒன்று, பிரான்சில் இருந்து வெளியான வந்தே மாதரம் பத்திரிகையின் தலையங்கப் பகுதி. மற்றொன்று காவல்துறைக்கு வாஞ்சி எழுதிய கடிதம். அந்தக் கடித வரிகளை சுருக்கமாகப் பார்க்கலாம். “ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்தி வருகிறார்கள். நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலைவைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்என்று எழுதி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தார்

கைதுப் படலம்

ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பின்னாளில் அவர்கள் இருவரும் அப்ரூவராக மாற்றப்பட்டார்கள்.  அவர்கள் அளித்த தவலின் அடிப்படையில் 16 பேரை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியது. காவல்துறையின் கொடுமைகளுக்கு பயந்து தர்மராஜா ஐயர், வேங்கடேச ஐயர் தற்கொலை செய்து கொண்டனர். எஞ்சிய 14 பேரையும் ஆங்கில அரசு கைது செய்தது.

1.  நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி)

2. சங்கர கிருஷ்ண ஐயர் (வாஞ்சியின் மைத்துனர்) – விவசாயி

3.மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளைகாய்கறி வியாபாரம்

4. முத்துக்குமாரசாமி பிள்ளைபானை வியாபாரம்

5. சுப்பையா பிள்ளை  வக்கீல் குமாஸ்தா

6. ஜகனாத அய்யங்கார்சமையல் தொழில்

7. ஹரிஹர ஐயர்வியாபாரி

8. பாபு பிள்ளை  விவசாயி

9. தேசிகாச்சாரிவியாபாரி

10. வேம்பு ஐயர்சமையல் தொழில்

11. சாவடி அருணாச்சல பிள்ளைவிவசாயம்.

12. அழகப்பா பிள்ளைவிவசாயம்

13. வந்தே மாதரம் சுப்பிரமணி ஐயர்ஆசிரியர்

14. பிச்சுமணி ஐயர்சமையல் தொழில்

இவர்களுடன், ஆஷ் கொலை சதித் திட்டத்தில் பங்கிருப்பதாக 1. .வே.சு. ஐயர், 2. சுப்பரமணிய பாரதி, 3. ஸ்ரீனிவாச ஆச்சாரி, 4.  நாகசாமி ஐயர்,  5. மாடசாமி பிள்ளை ஆகியோரையும் கைது செய்யும் முயற்சி நடந்தது.

இதில் மாடசாமி பிள்ளை, மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து தலைமறைவானார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மீதமுள்ள நான்கு பேர்களும் பாண்டிச்சேரியில் தங்கிவிட்டார்கள். பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை.

கைது செய்யப்பட்ட 14 பேரும் குற்றவாளிகள் என்று உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சங்கர கிருஷ்ணனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனையும் வழங்கப்பட்டது.

போஸுக்கு முன்னோடி வாஞ்சிநாதன்

ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட ஜூன் 17தான் ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான தமிழகத்தின் முக்கிய நிகழ்வாகும். அதன்பிறகு எந்த போராட்டமும் ஆங்கிலேயருக்கு எதிராக வலுப்படவில்லை, ஆங்கிலேய அடக்குமுறைகளும் அதிகமாகத்தான் இருந்தது.

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் பட்டேல், பகத் சிங் போன்றவர்களுக்கு முன்னதாகவே, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியவர் வாஞ்சிநாதன். அதன் முத்தாய்ப்பாகவே ஆஷ்துரையை அவர் சுட்டுக்கொன்றார். வாஞ்சிநாதனின் பெயர்வாஞ்சி மணியாச்சி சந்திப்புஎன்று ரயில் நிலையத்திற்கு மட்டுமே சூட்டப்பட்டிருக்கிறது. இதைத் தவிர வாஞ்சிநாதனுக்கு சிலைகளோ, நினைவுச் சின்னமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், வெள்ளைக்காரனின் அடிவருடி இந்தியர்கள் 32 பேர் 3002 ரூபாய் வசூல் செய்து ஆஷ் உடல் புதைக்கப்பட்ட பாளையங்கோட்டை மிலிட்டர் லைன் இங்கிலீஸ் சர்ச் கல்லறை தோட்டத்தில் ஒரு நினைவிடம் அமைத்தனர். இதைத் தவிர தூத்துக்குடியில் ஆஷுக்கு ஒரு மணி மண்டபமும், பாளையங்கோட்டையில் ஒரு சிலையையும் அவர்கள் வைத்தார்கள். ஆனால், வாஞ்சிநாதனின் தீரம் செறிந்த வரலாற்றை மவுனமாக சுமந்தபடி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வழக்கம் போல இயங்கிக் கொண்டு இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry