2 கிலோ இறாலுக்கு விலை போகக்கூடிய கிழவர் டிகேஎஸ் இளங்கோவன்! பிடிஆர்-ன் தரம் தாழ்ந்த விமர்சனங்களால் நெருக்கடியில் சபரீசன்!

0
312

செய்தியாளர்கள் சந்திப்பிலும், சமூக ஊடகப் பதிவுகளிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை இல்லாமல் பேசுவது, பதிவிடுவது போன்றவை, திமுகவுக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜக, அதிமுகவினரின் விமர்சனங்களுக்கு கோபப்பட்டு பதில் அளித்து வருகிறார். திமுகவில் இப்படி எந்த அமைச்சரும் நாகரீகமில்லாமலோ, தனி மனிதத் தாக்குதலோ செய்வதில்லை.

சில தினங்களுக்கு முன் லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. வளைகாப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுத்துவிட்டதால், ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் கூறியிருந்தார். ஜிஎஸ்டி கூட்டத்தை விட வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

தொலைக்காட்சி பிரபலமும், பாஜக நிர்வாகியுமான செளதாமணி டிவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு, அறிவு வேண்டுமடா, மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா?’ என நாகரீகமற்ற வகையில் டிவிட்டரில் பதிவிட்டார்.

கன்னடரா அல்லது தமிழரா என்ற அடையாள குழப்பம் , ஆடு வளர்ப்பவரா அல்லது போலீஸ் அதிகாரியா என்ற குழப்பம், மேலும் தனது சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களை ஆபாச விஷயங்களை வைத்து வீழ்த்திய ஒருவரின் செய்திகளை மீடியாக்கள் கவர் செய்கின்றவே. பஞ்சாயத்துக்கு கூட தேர்வாகாத, அந்த நபர், மாநில அரசின் கொள்கைகள் பற்றி கட்டளையிட்டு வருகிறார்என  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பதிவிட்டார்.

அதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசியல் விமர்சகரும், மருத்துவருமான சுமந்த் சி ராமனை ஒருமையில் பேசியுள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலில் பங்கேற்காதது குறித்து தொலைக்காட்சிகளில் கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் ஜேவிசி ஸ்ரீராமை டிவிட்டரில் பிளாக் செய்துவிட்டார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆகியோரை ஒருமையில் பேசி திட்டினார். இப்படி இவரது செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

பிடிஆர் செயல்பாடுகள் குறித்து, ஆங்கில ஊடகம் ஒன்று, திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவனிடம் கருத்து கேட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிடிஆர் எளிதில் எரிச்சல் அடைகிறார். அவரது பெரும்பாலான பேச்சுக்கள் அவர் ஆத்திரமடைவதன் வெளிப்பாடாகவே உள்ளது. அவர் யாரையும் வம்புக்கு அழைப்பதில்லை, வம்பு பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களின் பேச்சால் எளிதில் ஆத்திரமடைகிறார். ஓர் அரசியல்வாதியாக தன்னை அவர் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Also Read: மாப்பிள்ளை அரவணைப்பில் தனி டிராக்கில் பயணிக்கும் பிடிஆர்! கொந்தளிப்பில் சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள்!

நான் எப்போதும் அவரிடம் அதைதான் சொல்வேன். எதிரணியினர் எப்போதும் நம்மை சீண்ட முயற்சிப்பார்கள். அப்போது, நாம் அதை சரியாக அணுக வேண்டியதுள்ளது. ஏனென்றால், அரசியல் களம் வித்தியாசமனது. அதிகாரத்தில் இருக்கும் நாம், செயல்களில் ஈடுபட வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்ப்பார்கள். சண்டைபோட வேண்டுமென விரும்பமாட்டார்கள். இதைத்தான் எப்போதும் அவருக்கு அறிவுறையாக சொல்வேன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு அவர் சென்றிருக்க வேண்டும்.

திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களையும் கவனித்து வருகிறார். அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பழனிவேல் தியாகராஜனுக்கும் அவர் அறிவுரை வழங்குவார். எதிர்கட்சிகள் என்றால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அதை நாம் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். எங்களுடைய கட்சி தலைமை, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுவதை கவனித்து வருகிறது. ஏற்கனவே, இது குறித்து ஒரு முறை அறிவுரை வழங்கியுள்ளார். இனி மேல் இது போன்ற சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அவர் மீண்டும் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கிழ முட்டாள்(2 இறாலுக்கு விலை போகக்கூடியவர்), கட்சியின் அடுத்தடுத்த 2 தலைவர்களால் கட்சியின் 2 பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர், உளறுகிறார்என டிவிட்டரில் பதிவிட்டார். இதனால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பு எழுந்தது. இதையடுத்து அந்தப் பதிவை அவர் நீக்கியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலத்தின் நிதியை நிர்வகிகக் கூடிய அமைச்சராகப்பட்டவர், தெளிவான சிந்தனையும், திடமான மனநிலையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பொதுவாகவே பார்த்தால், பிடிஆர் பழனிவேல்ராஜன் மன அழுத்தத்தில் இருப்பதாகவே தெரிகிறது. தனது தகுதிக்கு மு.. ஸ்டாலின் உரிய அங்கீகாரம் தரவில்லை என்று அவர் கவலைப்படுவதே இந்த மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம். இதன் வெளிப்பாடாகவே, அனைவரையும் சகட்டு மேனிக்கு தனிநபர் விமர்சனம் செய்தும், தான் என்ற அகங்காரத்திலும் அவர் பதிவுகளை வெளியிடுவதாகத் தெரிகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குச் செல்ல பிடிஆர் தனி விமானம் கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியானதாக டெல்லியில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் பதிவிட்டிருந்தார். அவரை கடுமையாக விமர்சித்து பதிலளத்த பிடிஆர், நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை, ஏற்பாடு செய்து கொள்ளும் திறன் எனக்கு உள்ளது எனக் கூறினார். இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகளால், திமுகவுக்கு மட்டுமின்றி, கட்சித் தலைமைக்கும் அவர் நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல், அவரை அரசியலுக்கு அழைத்துவந்து அமைச்சர் பதவியும் வாங்கிக் கொடுத்த சபரீசனுக்கும் பிடிஆர் பழனிவேல் ராஜன் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார். விரைவில் அவர் அமைச்சரவையில் இருந்து கட்டம் கட்டப்படலாம் என்றே தெரிகிறது.   

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry