ருத்ர தாண்டவம் ரிலீஸ் தள்ளிப்போகுமா? திட்டமிட்டபடி வெளியாகும் என இயக்குநர் உறுதி! நோட்டீஸ் கிடைக்கவில்லை என விளக்கம்!

0
39

ருத்ர தாண்டவம் திரைப்படம் கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, கிறிஸ்தவ அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

திரெளபதியைத் தொடர்ந்து, மீண்டுமொரு பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி. அவர் இயக்கியிருக்கும்ருத்ர தாண்டவம்திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 1-ம் தேதி) திரைக்கு வரவிருக்கிறது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராகவும், போதை கலாசரத்தை தோலுரிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தத் திரைப்படம், சமீபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டு காட்டப்பட்டதுபார்த்த அனைவருமே படத்தை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், படத்தில் Sneak Peekஐ படக்குழு வெளியிட்டது. அதில், கிறிஸ்துவ பாதிரியாரான மனோபாலா பண வசூலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

மத போதகர்கள் சிலர் பணம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையிலேயே மனோபாலா கதாபாத்திரத்தை சித்தரித்து இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த வீடியோவைப் பார்ப்பது அவசியம்.

இந்நிலையில், சிறுபான்மை கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் ருத்ர தாண்டவம் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை தாக்கல் செய்துள்ள சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சிறுபான்மை கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையிலும் வசனங்கள், காட்சிகள் உள்ளது என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு தொடர்பாக  நாளைக்குள் பதில் அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வேல்ஸ் மீடியா சார்பாக படத்தின் இயக்குநர் மோகன் ஜியிடம் கேட்டபோது, “இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு. இதுவரை எங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை. வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்என்று கூறினார்.

படத்துக்கு தடைகோரி கிறிஸ்தவ அமைப்பு நீதிமன்றத்துக்கு சென்றிருப்பதால், ருத்ர தாண்டவம் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா என்று ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால், ‘ருத்ர தாண்டவம்திரைப்படம் எந்த சமூகத்திற்கும், மதத்திற்கும் எதிராக படமாக்கப்படவில்லை. கட்டாய மதமாற்றம் தவறு என்பதைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறோம் என படக்குழு கூறியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry