மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுகுடித்த இருவர் உயிரிழப்பு! சயனைடு கலந்து மதுகுடித்ததே காரணம் என வழக்கம்போல அரசு அறிவிப்பு!

0
62
Poorasamy, 65, (left) and Palanigurunathan, 56, died late on Monday 

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்த நிலையில், தஞ்சாவூரில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக திறந்திருந்த டாஸ்மாக் பாரில் கள்ள மது குடித்தவர்கள் இருவர் உயிரிழந்தனர். இவர்கள், மதுவில் சயனைடு கலந்து குடித்து இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

இந்தசூழலில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்தேறிள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் 55 வயதான பழனிகுருநாதன். இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொள்ளம்பட்டறை நடத்தி வந்தார்.

Also Read : அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! 12 இடங்களில் நடக்கும் ரெய்டால் பரபரப்பு!

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான பூராசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் நேற்று மாலை 5 மணிவரையில் பட்டறையில் வேலை செய்துள்ளனர். ஒருகட்டத்தில் பட்டறையிலேயே இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்கள் அருகில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் இரண்டு கிடந்துள்ளது. அதில் ஒன்றில் பாதி மதுபானமும், ஒரு பாட்டில் திறக்காமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரையும் மீட்ட உறவினர்கள், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசும் இருவரது குடும்பத்தினரும், குடும்பத்தில் எவ்வித பிரச்னையும் கிடையாது. இருவருக்கும் இணைநோய்கள் எதுவும் இல்லை. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். வீட்டு வாசலில் உட்கார்ந்து எல்லோரிடமும் சந்தோஷமாகப் பேசிவிட்டுப் பட்டறைக்குச் சென்றவர்கள் இறந்துகிடந்திருக்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு பேரும் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்திருக்கின்றனர். அந்த மதுவில்தான் ஏதோ பாய்சன் இருந்திருக்கிறது. அதுவே இரண்டு பேர் இறப்புக்கும் காரணம். போலீஸார் இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் மறைப்பது, எங்களுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது” என்றனர்.

Also Read : பள்ளி திறந்தாச்சு! புத்தகம் கொடுத்தாச்சு! ஆசிரியர்கள் இல்லையே..! தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சனம்!

பழனி குருநாதன், பூராசாமி இருவரும் டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய இருவரது உடல்களும், உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களை தஞ்சாவூர் பரிசோதனை மையத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை, அவர்கள் அருந்திய மதுவின் பரிசோதனை முடிவின்படி, அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுவில் சயனைடு எப்படி கலந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read : தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரிகளை மூட வேண்டும்! 30 அடி அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்படுவதாக பாமக குற்றச்சாட்டு!

ஏற்கெனவே தஞ்சாவூரில் மதுபான கடை அருகே  கள்ளத்தனமாக விற்கப்பட்ட மது அருந்திய குப்புசாமி, விவேக் என்ற இருவர் இதே போல மரணமடைந்ததும் அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் மயிலாடுதுறை அருகிலும் சயனைடு கலந்த மது குடித்த இருவர் மரணம் அடைந்திருப்பது அரசு மதுபான கடைகளில் கலப்பட  மது விற்கப்படுகிறதா?  என்கிற ஐயத்தை அனைவரின்  மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கள்ள மது போலவே கலப்பட மது விற்பனையும்  அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry