‘ஜெயில்’ – கண்டெய்னர் லாரியில் டூர் போன அனுபவம்! வசந்தபாலன் டச் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

0
50

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்நதி, ராதிகா, ரவிமரியா உள்ளிட்ட இன்னும் சிலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறதுஜெயில்’.

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன் போன்ற  மாறுபட்ட யதார்த்தமான படங்களை இயக்கிய வசந்தபாலனின் படம் என்பதால் அதிகம்  எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அப்படி எதிர்பார்க்கப்பட்ட அத்தனை ஃபர்னிச்சர்களையும் சுக்குநூறாக உடைத்து வைத்திருக்கிறார் வசந்தபாலன். டைட்டில் முடிந்ததுமேஜெயில் படம் மூலமா நான் என்ன சொல்ல வர்றேனா  என்பது மாதிரியான டோன்ல, வசந்தபாலனின் வாய்ஸ் ஓவர் ஆரம்பமாகிறது.

சென்னை மாநகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள், நகரத்திற்குவெளியேமறு குடியமர்வுக்கு உட்படுத்தும் போது, அதனால அவங்களோட கல்வி, மருத்துவம்,  வாழ்வாதாரம்ன்னு எல்லாமே எப்படிலாம் பாதிக்கப்படுதுஅப்படிங்குறதுதான் அந்த  வாய்ஸ் ஓவர் கண்டெண்ட். “அடடேஓஹோஅப்போ ஜெயில் பிரமாதமான படமா இருக்குமோன்னு நினைக்கும் போதுதான், அடுத்தடுத்து வரும் காட்சிகள் மூலமா உண்மையாவே நாம தான் ஜெயில்ல அடைக்கப்பட்டு இருக்கோம்ன்னு புரியுது.”

கர்ணா என்ற கேரக்டர்ல ஜி.வி. பிரகாஷ், அசப்புல அப்படியே வடசென்னை  பாடிலேங்குவேஜ், மேனரிசம்ன்னு படு லோக்கலா மிரட்டுறார். அதேமாதிரி அவருக்கு  ஜோடியா நடிச்சிருக்குற அபர்நதி, ஜி.வி. பிரகாஷ்க்கு செம்ம டஃப் கொடுக்குறதுமா, அப்பப்போ கிஸ் கொடுக்குறதுமா அசால்ட்டு பண்ணிருக்காங்க. இந்த ரெண்டு பேரும் தான்  படத்துக்கு பலம் சேர்த்துருக்காங்க. அத அப்படியே, சும்மா சும்மா வந்து டூயட் பாடி திரும்பவும் ரசிகர்கள வெறுப்பேத்துறாங்க.

இன்னொருபக்கம் ஜி.வி. பிரகாஷோட நண்பர்கள், அவரோட அம்மா ராதிகா, போலீஸா ரவிமரியா இப்படின்னு பல கேரக்டர்கள்அட நாங்களும் இருக்கோம்பான்னுதலைய காட்டுறாங்க. இதுக்கு இடையில அவங்க வசிச்சிட்டு வர்ற காவேரி நகர் பகுதிய, பொதுச் சமூகம் எப்படி பார்க்குதுன்னு சொல்ல நினைச்சிருக்கார் இயக்குநர். அந்த நினைப்ப அப்படியே விட்டுட்டு வழக்கமான கஞ்சா கடத்தல், கேங்ஸ்டர் வார், மர்டர் இதையெல்லாத்தையும் பயன்படுத்திக்குற போலீஸ் ஆபிஸர் ரவிமரியான்னு, கண்டெய்னர் லாரில டூர் போன பீல் கொடுக்குது ஜெயில்.

குண்டுசட்டில குதிரை ஓட்டுன கதையா நகருது முதல் பாதி திரைக்கதை. அப்போ இரண்டாம் பாதி எப்படின்னு உங்களோட கேள்விக்கு Choose the best answer டைப்ல ஆப்சன் கொடுத்தா கூட பதில் கிடையாது. அருமையான கதைக்களம், அட்டகாசமான நடிகர்கள்லயும் புடிச்ச வசந்தபாலன், அத திரையில கொண்டுவர முடியாம திகைச்சுப் போய் நிக்குறத காட்சியமைப்புகள்ல பார்க்க முடியுது

சம்பந்தமே இல்லாம துருத்திக்கொண்டு வரும் பாடல்கள், செயற்கைத்தனமான காட்சிகள், திருப்பங்களே இல்லாத கதை நகர்வு என எந்த இடத்திலும் வசந்தபாலனின் டச் சுத்தமாக இல்லவே இல்லை. அதேபோல் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், ஏற்கனவே வலுவிழந்து பயணிக்கும் திரைக்கதைக்கு பலம்சேர்க்க முடியாமல் பரிதவிக்கிறது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு மட்டும் கொஞ்சம் ஆறுதலான விசயம். பெரிதாக எதிர்பார்க்கப்பட்டஜெயில்’, திரைக்கதை என்னும் வலிமையான சுற்றுசுவர் இல்லாமல் தனது சுயத்தை இழந்துவிட்டது.

விமர்சனம்களந்தை அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர்

தொடர்புக்கு :- kalandhai.abdulrahman@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*