ஆன்லைன் வகுப்புகளால் விபரீதம்! பாதிக்கப்படும் ஆசிரியர்கள்! மாணவர்களுக்கும் பேராபத்து?

0
11

கொரோனா காலத்தில், குழந்தைகளின் ஆன் லைன் வகுப்பு பற்றி கவலைப்படும் நீங்கள், எத்தனை மன அழுத்தத்துக்கு இடையே, ஆசிரியர்கள் ஆன் லைன் வகுப்புகளை எடுக்கிறார்கள் என கவலைப்பட்டதுண்டா? ஆசிரியர்களுக்கான மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகளுடன், வேல்ஸ் மீடியா எப்போதும் அவர்களுக்காக தோள் கொடுக்கும் என்பதை உரக்கச் சொல்லவே இந்தக் கட்டுரை.

கொரோனா பேரிடர் சூழலில் ஆன் லைன் கல்வி மட்டுமே சாத்தியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. தனது வீடு, பிள்ளைகள் ஆகியவற்றை கவனிப்பதுடன், தான் பெறாத பிள்ளைகளான மாணவர்களுக்காக புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, ஆன்லைன் வகுப்புக்கு ஆசிரியர்கள் தயாராகியுள்ளனர். இதனால் சில மாதங்களாக அவர்கள் கடுமையான மன அழுத்ததுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

மேலதிகமாகச் சொல்வதென்றால், சமுதாய சூழல், குடும்ப சூழல், பொருளாதர சூழல் போன்ற இன்னபிற காரணங்களால், மானவர்கள் ஒத்துழைக்க இயலாவிட்டால், அதற்கு ஆன் லைன் வகுப்பெடுக்கும் ஆசிரியரையே, பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் காரணமாகக் கூறுகின்றனர். பெற்றோரின், பள்ளி நிர்வாகத்தின் இயலாமைக்கு ஆசிரியர்கள் பலிகடா. பணம் காய்க்கும் மரங்களான ஆசிரியர்களின் (தனியார் பள்ளிகள்) மன அழுத்தத்தை குறைக்க, உரிய நிபுணர்களைக் கொண்டு ஆலோசனை வழங்குவதற்குக் கூட பள்ளி நிர்வாகங்கள் தயாராக இல்லை என்பதுதான் நகை முரண்.

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், ஆசிரியர்களான நீங்கள் மன அழுத்தமின்றி பணி செய்ய, என்ன செய்யலாம்?

1. எப்போது இயல்பு நிலை திரும்பும் எனத் தெரியாத நிலையில், சூழலை எதிர்கொள்ள நீங்கள் பழக வேண்டும். அட்டவணையிட்டு தின அலுவல்களை செய்வது, வேலைகளுக்கான முன்னுரிமையை பகுத்தறிவது, தேவையற்ற செய்திகளை தவிர்ப்பது போன்றவை அவசியம். சுலபமாகச் சொல்வதென்றால், மன அழுத்தம், மனப்பதற்றம் ஏற்படாதவாறு, சூழலை சாதகமாக்கிக் கொள்வதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

2. உங்களது ஆரோக்கியத்தை பின்னுக்குத்தள்ளும் எந்தவொரு செயலையும் முன்னெடுக்கக்கூடாது. உடற்பயிற்சி, சத்தாண உணவுகள், தியானம், உங்களுக்குப் பிடித்தமானவற்றை செய்வது ஆகியவை உங்களது தின அட்டவணையில் இடம்பெற வேன்டியது அவசியம். வகுப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறிது நடப்பது அல்லது அடிப்படை உடற்பயிற்சிகளை செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், மூளை ஆக்கப்பூர்வமாக செயல்படும்.

3. ஆன் லைன் வகுப்புகளால், கல்வி கற்பித்தல் மற்றும் கல்வி போதிக்கும் முறை தற்போது பெரிய அளவு மாறியுள்ளது. எனவே, அடையக்கூடிய, சாத்தியமான இலக்கை உங்களுக்கும், மாணவர்களுக்கு வரையறுப்பது அவசியம். சாத்தியமற்ற இலக்கை நோக்கி பயணித்து, நாள் முடிவில் மன அழுத்தத்துக்கு ஆளாவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

4. உங்களுக்கு நெருக்கமாணவர்களிடம் அதிகம் பேசுங்கள். குறிப்பாக சக ஆசிரியரிடம் உங்களது மனக்குமுறல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால், உங்களைப்போன்ற சூழலிலேயே அவர்களும் இருப்பதால், உங்களது கஷ்டங்களுக்கு அவர்களும், அவர்களது கஷ்டங்களுக்கு நீங்களும் ஆறுதல் கூறிக்கொள்ளமுடியும். இதன் மூலமும் பெருமளவு மன அழுத்தம், கவலை குறையும்.

5. வாய்ப்புள்ளவர்கள், வீட்டில் உங்களுக்கான பிரத்யேக பணியிடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆக்கப்பூர்வமாக செயல்பட இது உங்களுக்கு உதவும். அதேநேரம், அன்றைய தினத்துக்கான பணி முடிந்துவிட்டால், நீங்கள் சுதந்திரமாக உணர இது வழிகோலும்.

Also Watch : https://www.youtube.com/watch?v=E8-7AXG3inM&t=29s(கண்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆன் லைன் வகுப்பு)

எதிர்கால சமுதாயத்தை ஆசிரியர்களான நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். எனவே, நீங்கள் மனோ பலத்துடனும், புத்தாக்கத்துடனும் இருப்பது அவசியம். நீங்கள், மன அழுத்தமாகவோ, மனப்பதற்றமாகவோ இருந்தால், அது மாணவர்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பேராபத்தை தடுக்கக் கூடிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது என்பது உணர வேண்டும்.

Input – The Print
Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry