இயக்குநர் சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை, பான் இந்தியா படமாக எடுக்கவுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்துள்ளார். ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார்.
ஜெய் நடித்த ‘வீரபாண்டியபுரம்’, ‘குற்றம் குற்றமே’ படங்களுக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படஇசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பாரதிராஜா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில், விஜய் ஆண்டனி , சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். இவர், தெலுங்கில் வெளியான ‘ஜதி ரத்னலு’ படத்தில் நடித்தவர்.
இந்தப் படத்தில், தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 1980-ம் கால கட்டப் பின்னணியில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மே16 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி நடக்க இருக்கிறது. படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். விஜய்.கே.சக்கரவர்த்தி ஒளிப்பதிவுவும், ஆண்டனி படத்தொகுப்பும் செய்கின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry