பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் வசிக்க முடிவில்லை! வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? Who can’t afford to buy a house of their own?

0
24
According to astrology, who will be forced to live in a rented house?| Pic. Courtesy : Adobe Stock

கடந்த பதிவில் சொந்த வீடு யாருக்கு அமையும்? சொந்த வீடு அமைவதற்கான ஜாதக கிரக நிலைகளையும் பார்த்தோம். இந்தப் பதிவில் வாடகை வீட்டிற்கான கிரக நிலைகளை ஆராய்வோம்.

சொந்த வீடு சோஷியல் ஸ்டேட்டஸாகப் பார்க்கப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம். சொந்த வீடு வைத்திருப்பவர்களையும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களையும் சமூகத்தில் இருப்பவர்கள் ஏற்றத்தாழ்வுடன் பார்க்கும் நிலை இருக்கிறது. குறிப்பாக நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞர்கள் ஏராளமானோர் 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாததற்குச் சொல்லப்படும் காரணங்களில் சொந்த வீடு இல்லை என்பதும் ஒன்று.

Also Read : வாடகை வீட்ல இருக்கீங்களா..? எப்ப சொந்த வீடு அமையும்னு தெரிச்சுக்கோங்க? According to astrology, who will own a house?

“சரி… நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு, எட்டாக்கனியாக இருக்கிறது ஓகே… சிலர் கையில் பலகோடிகளை வைத்திருந்தாலும் சொந்த வீடு அமையவில்லையே, அதற்கு என்ன காரணம்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது அதற்கான விளக்கத்தை தருகிறேன்.

வாடகை வீட்டிற்கான கிரக நிலைகள் :

கடந்த பதிவில் சொந்த வீடு அமைவதற்கான ஜாதக கிரக நிலைகளை விளக்கி இருந்தேன். அதில் லக்னத்தில் இருந்து 4-ம் வீடும், 4-ம் வீட்டு அதிபதி, செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் நல்ல நிலையில் (ஆட்சி/உச்சம், சுபர் பார்வை, சுபர் சேர்க்கை) இருந்தால் சொந்த வீடு அமையும் என்று சொல்லியிருந்தேன். இப்போது, யார் யாருக்கு சொந்த வீடு அமையாது என்பது பற்றி பார்க்கலாம்.

வீடு, வாகனத்தை குறித்தும் 4-ம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்து பாவ கிரகங்களின் தொடர்பு கிடைத்தால், அந்த ஜாதகர் தலைகீழாக நின்றாலும் வீடு வாங்கவே முடியாது. ஏதோ ஒரு நிலையில் வீடு வாங்கினாலும் அதில் வில்லங்கம், பிரச்னைகள் சேர்ந்து ஜாதகரை படாத பாடு படுத்தும்.

  • 4-ம் அதிபதி ராகு சாரம் பெறுவது, 4-ம் இடத்து அதிபதி 6, 8-ம் இடத்துடன் தொடர்பு கொள்வது அல்லது 6, 8 அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் சொந்த வீடு அமையாது.
  • 4-ம் அதிபதி 6-ல் இருந்தால் உறவினர் வீட்டில் வசிக்க வேண்டி நிலை ஏற்படும்.
  • 4-ம் அதிபதி 6, 8, 12-ம் அதிபதிகளில் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் சொந்த வீடு இருந்தாலும், அந்த ஜாதகரால் சொந்த வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்படும்.
  • 4-ம் பாவம், 4-ம் அதிபதி, சுக்கிரன் இவர்களுக்கு 6, 8, 12-ம் அதிபதிகளில் ஒருவரும் அல்லது ராகு, கேது தொடர்பு கொண்டாலும் கட்டிய வீட்டில் வசிக்கும் யோகம் இருக்காது. வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை 91590 13118 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பிலோ அல்லது astrovenkataeswar@gmail.com என்ற மெயிலுக்கோ அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry