வாட்ஸ் அப்பில் புதிய வசதி! 7 நாட்களில் தானாக டெலிட் ஆகும் அம்சம் அறிமுகம்! ஆன் செய்வது எப்படி?

0
39

வாட்ஸ் அப்பில் பெறப்படும் குறுஞ்செய்திகள் 7 நாட்களில் தானாக மறைந்துவிடும் (disappearing messages) அம்சம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சமானது இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமின்றி iOS பயனர்களுக்கும் கிடைக்கிறது. இதில், பயனர், ஒரு தனிப்பட்ட சாட்டிற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். குரூப் செய்திகளுக்கு, அட்மின் மட்டுமே இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய முடியும். ஒரு பயனருக்கு செய்தியை அனுப்பி, அவர் 7 நாட்கள் தங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தவில்லை என்றால், அந்த செய்தி தானாகவே மறைந்துவிடும். எனினும், நோட்டிஃபிகேஷனில் அந்த செய்தி காண்பிக்கப்படும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.

செய்திகள் தானாக மறைந்துவிடும் அம்சத்தை ஆன் செய்யும்போது, ஆட்டோடவுன்லோட் ஆனில் இருந்தால், செய்திகள் அழிந்தாலும், புகைப்படங்கள் போனில் டவுன்லோட் ஆகியிருக்கும். செய்திகள் மறைக்கப்படும் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் சாட்டிலிருந்து, அந்த அம்சம் ஆன் செய்யப்படாத மற்றொரு சாட்டிற்கு ஒரு செய்தியை ஃபார்வேர்டு செய்தால், அந்த செய்தி அப்படியே இருக்கும். இந்த புதிய அம்சத்தை பெறுவதற்கு, ஆன்டிராய்டுக்கு 2.21.206.15 என்ற வெர்ஷனும், ஆப்பிள் ஃபோனுக்கு 2.21.121.4 என்ற வெர்ஷனும் அப்டேட் செய்திருப்பது அவசியம். புதிய வசதியை எப்படி ஆன்டிராய்டு ஃபோனில் ஆன் செய்யலாம் என பார்க்கலாம்.

  • அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யவும்.
  • நீங்கள் இந்த disappearing messages அம்சத்தை இயக்க விரும்பும் காண்டாக்ட்ஐ தேர்வு செய்ய, குறிப்பிட்ட காண்டாக்ன் ப்ரொபைலுக்குள் செல்லவும், அதாவது சாட்டிற்குள் நுழைந்து குறிப்பிட்ட காண்டாக்டின் பெயரை கிளிக் செய்யவும்.
  • அங்கே டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் எனும் புதிய அம்சத்தினை என்க்ரிப்ஷன் விருப்பமாக மேலே காண்பீர்கள். அதை கிளிக் செய்து, பின்னர் குறிப்பிட்ட அம்சம் சார்ந்த தகவலை படித்துவிட்டு தொடரவும்.
  • டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் என்கிற விருப்பதிற்குள், இது இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு அது தானாகவே மறைந்துவிடும் என்கிற குறிப்பு இடம்பெறும் அதன் கீழே ஆன் மற்றும் ஆப் என்கிற இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். இந்த புதிய அம்சம் டீபால்ட் ஆகவே ஆப்இல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நீங்கள் ஆன் என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த disappearing messages அம்சத்தினை நீங்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றுவதற்கான வசதியும் உண்டு. disappearing messages அம்சத்தை நீக்க மேற்குறிப்பிட்ட அதே செயல்முறையை மீண்டும் செய்யவும். ஆனால் கடைசியாக ஆன் என்பதற்கு பதில் ஆஃப் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.