நாட்டின் முதல் Artificial Intelligence பள்ளி கேரளாவில் தொடக்கம்! ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா?

0
124
Representational Image

இந்தியாவிலேயே முதன்முறையாக, கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (Artificial Intelligence) செயல்படக்கூடிய பள்ளிக்கூடம் அறிமுகம் ஆகியுள்ளது. இயந்திரங்கள் மனித அறிவுடன் இயங்குவதையே செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ(AI) என்கிறோம்.

கேரளாவில் ஒரு பள்ளிக்கூடமே ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல் ஏஐ பள்ளி ஆகும். சாந்திகிரி வித்யாபவன் எனும் இந்தப் பள்ளியை குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்த AI பள்ளியானது iLearning Engines (ILE) USA, Vedhik eSchool ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

Kerala’s first AI (Artificial intelligence) school at Santhigiri Vidyabhavan in Thiruvananthapuram

இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் வழக்கம் போல அவர்களின் வேலையை செய்வார்கள். அதே சமயத்தில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏஐ உதவி செய்யும். உதாரணமாக, ஆசிரியர்களுக்குப் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஏஐ அதைத் தீர்த்து வைக்கும். அதேபோல, கடினமான பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் உத்தியையும் ஆசிரியர்களுக்கு அது போதிக்கும்.

Also Read : அச்சுறுத்தும் ஏஐ தொழில்நுட்பம்! வேலையைத் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை!

அதேபோல, மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் ஏஐ விளக்கம் அளிக்கும். உதாரணமாக, ஒரு கணிதக் கூற்றை (Problem) பல வழிகளில் தீர்க்கும் வழிமுறைகளை ஏஐ கற்றுக்கொடுக்கும். அதில் எது நமக்கு எளிதாக இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம். வெறும் பாடங்களை மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவன் மீதும் ஏஐ பிரத்யேகமாக கவனம் செலுத்தும். சர்வதேசத் தரத்திலான கற்றல் வழிமுறையை இது பின்பற்றுவதால், மாணவர்களுக்கு கல்வி கற்பது எளிதான விஷயமாக மாறிவிடும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் முதல் AI பள்ளியின் சில முக்கிய அம்சங்கள்:

  • இந்த AI பள்ளியானது 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கானதாக இருக்கும். வெவ்வேறு நிலை சோதனைகள், திறன் தேர்வுகள், ஆலோசனைகள், வேலைக்கான திட்டமிடல் மற்றும் முக்கியத் தரவுகளை சிறப்பாக நினைவில் வைத்துக் கொள்வதற்கான தந்திரங்கள் போன்ற பல பயனுள்ள விஷயங்களை  மாணவர்கள் பெறுவார்கள்.
  • பள்ளியில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்ப அமைப்பு, வழக்கமான பாடங்களுக்கு உதவுவது மட்டுமின்றி, நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்படுவது, குழுக்களாகப் பேசுவது, கணிதத்தில் சிறந்து விளங்குவது, சிறப்பாக எழுதுவது, நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பது போன்றவற்றையும் கற்றுக்கொடுக்கிறது. மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
  • இந்த AI பள்ளி வழக்கமான பள்ளியாக இல்லாமல், JEE, NEET, CUET, CLAT, GMAT மற்றும் IELTS போன்ற பெரிய தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறது. மாணவர்கள் இத்தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்ல AI உதவுகிறது.
  • மாணவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிட உதவும் வகையில், பிரபலமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை பெற மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது. எனவே அவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்வது கடினமானதாக இருக்காது.
  • AI பள்ளி ஆடம்பரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், அதற்கு அதிக செலவு இல்லை. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆன்லைன் ஆதாரங்கள் பள்ளியின் இணையதளத்தில் உள்ளன. அதிக பணம் செலவழிக்காமல் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.
  • AI பள்ளி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கிறது. இது பள்ளி வேலைகள், சோதனைகள் மற்றும் போட்டிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்கிறது.

Also Read : ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கும் ChatGPT செயலி! கதை, கவிதை, கட்டுரை எழுத இனி கவலை வேண்டாம்! How to download ChatGPT on Android?

ஒரு மாணவனுடன் தொடர்ச்சியாக உரையாடுவதில் இருந்தே அந்த மாணவன் எந்த விஷயத்தில் நிபுணத்துவமாக இருக்கிறான், எதிர்காலத்தில் எந்தத் துறையை அவன் தேர்ந்தெடுக்கலாம் என்பது முதற்கொண்டு இந்த ஏஐ அறிவுரை வழங்கும். அறிவுரை மட்டுமல்லாமல் அந்தத் துறைக்குச் செல்ல எப்படித் தயாராக வேண்டும் என்றும் அது பயிற்சி அளிக்கும். இதை எல்லாம் தவிர்த்து மாணவர்களின் தனிப்பட்ட சந்தேகங்கள், அவர்களின் உறவு முறையில் ஏற்படும் சிக்கல்கள் என அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும் விதமாக இந்த ஏஐ செயல்படும்.

Kerala’s First AI School Launched In Thiruvananthapuram

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்தப் புதிய கற்றல் முறை, உலகளாவிய தரநிலைகளைப் பின்பற்றுவதாகவும், புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) அடிப்படையிலான தேசியப் பள்ளி அங்கீகாரத் தரநிலைகளுடன் மாணவர்கள் கற்க முடியும் என்றும் வேதிக் இஸ்கூல் கூறுகிறது.

அதேநேரம், இந்தியாவின் முதல் AI பள்ளியின் அறிமுகம் பல கேள்விகளையும் எழுப்புகிறது. ChatGPT போன்ற மேம்பட்ட AI அமைப்புகள், வகுப்பறைகளில் இனி ஆசிரியர்களை தவிர்த்துவிடுமா? AI பள்ளி, தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், பாரம்பரிய கற்பித்தல் முறை இன்றியமையாதவை. மாணவர்களின் மீது ஆசிரியர்கள் காட்டும் உணர்வு ரீதியான அக்கறையை AI ஆல் முழுமையாக வழங்க முடியுமா? என்ற கேள்வியையும் தவிர்த்துவிட முடியவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry