கெஜ்ரிவாலுக்கு அதிகார போதை! முதல்வராயிட்டா மறந்துடுமா? அன்னா ஹசாரே கடும் விமர்சனம்!

0
76

இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “நீங்கள் முதல்வரான பின்னர் நான் உங்களுக்கு முதன்முறையாகக் கடிதம் எழுதுகிறேன். அதற்குக் காரணம் அண்மையில் வெளியான டெல்லி மதுபானக் கொள்கை பற்றிய செய்திகள்.

நீங்கள் உங்களது ஸ்வராஜ் என்ற புத்தகத்தில் மதுபானக் கொள்கை பற்றி சில மகத்தான பரிந்துரைகளை சொல்லியிருந்தீர்கள். அந்த புத்தகத்திற்கு நான் முன்னுரை எழுதிக் கொடுத்தேன். நீங்கள் அதில், மக்களின் சம்மதம் இல்லாமல் அந்தப் பகுதியில் மதுபானக் கடைகளே திறக்கக் கூடாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால், முதல்வரான பிறகு அதை எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்கள்.

Also Read : கனியாமூர் பள்ளி கலவரம்! அதிர்ச்சி அளிக்கும் சேத மதிப்பு! சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!

டெல்லி அரசிடமிருந்து நான் இப்படி ஒரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல்வரான பிறகு லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டப்பேரவையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர நீங்கள் முயற்சிக்கவில்லை. இப்போது உங்கள் அரசாங்கம் மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.

உங்கள் வார்த்தைகளும் செயல்பாடும் வெவ்வேறு என்பதைக் காட்டுவதற்கு இது ஒன்றே போதும். மகாராஷ்டிராவில் மதுபானக் கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக, மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது. ஆனால், இன்று டெல்லி அரசு மதுபானக் கொள்கையை அமல்படுத்த முயன்று அதன் நிமித்தமான ஊழலில் சிக்கியுள்ளது. டெல்லியில் மூலைமுடுக்கெல்லாம் மதுபானக் கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா? நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள்.” இவ்வாறு அன்னா ஹசாரே அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : மயான பூமியாக மாறும் தமிழகம்! காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை! திமுக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

கடந்த 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அன்னா ஹசாரே தலைமையில் நடந்த இந்தப் போராட்டம் பிரம்மாண்ட போராட்டமாக உருவெடுத்தது. ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி ஹசாரே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அந்த மேடையில்தான் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகமானார்.

GETTY IMAGE

அன்னா ஹசாரேவின் தொப்பி அடையாளத்தோடு 2012ல் டெல்லி தேர்தலில் களம் கண்ட கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. இப்போது 2வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கட்சிக்கும், கெஜ்ரிவாலுக்கும் தனது ஆதரவை வெளியில் இருந்து அன்னா ஹசாரே அளித்தார். ஆனால், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பின்னர் அதனை பலமுறை விமர்சனங்களுக்கு உள்ளாக்கினர். இதனால், கெஜ்ரிவால் அன்னா ஹசாரேவைப் பற்றி பேசுவதைக் கூட தவிர்த்து வந்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry