எளிய முறையில் ஆதார் திருத்த வேண்டுமா? அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள வக்கீல் சம்பத்! புதிய வரலாறு படைக்கும் கலாம் சேவை மையம்!

0
104

முன் எப்போதும் இல்லாத வகையில், புதுச்சேரியில், கலாம் சேவை மையத்தினர், ஆதார் திருத்த முகாம் நடத்துகின்றனர். அரசால் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வந்த இந்த முகாம், அஞ்சல்துறையுடன் இணைந்து தனியார் சேவை அமைப்பு நடத்துவது முதல் முறையாகும்.

பிரபல வழக்கறிஞர் சம்பத் தலைமையிலான கலாம் சேவை மையத்தினர், பொது சேவையில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். சித்திரை மாதத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகளின் சிரமம் அறிந்து, சிக்னல்களில் பந்தல் அமைத்துக் கொடுத்தனர். வேல்ராம்பட்டு ஏரியை, சம்பத் தனது சொந்த செலவில் தூர்வாறியதன் பலனாக, தற்போது அந்த ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் பல கிராம மக்கள் பயன்பெறுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், சாலை செப்பனிடுவது, கழிவறை இல்லாமல் சிரமப்படும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுப்பது, புயல் நிவாரணம் உள்ளிட்ட பணிகளையும் சத்தமில்லாமல் செய்து வருகிறார். முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் கலாம் சேவை மைய நிறுவனர் சம்பத் 2021-ம் ஆண்டுக்கான காலண்டர்  விநியோகித்துள்ளார். அந்த வரிசையில், மார்கழி மாதத்தையொட்டி, பல வண்ண கோலப்பொடியையும், கோலம் போடுவதன் பயன் என்ன என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் கலாம் சேவை மையத்தினர் விநியோகித்தனர்.

Also Read: புதுச்சேரியில் கோலமாவு விநியோகித்த கலாம் சேவை மையம்! குடும்பப் பெண்களின் தியாகத்தை கவுரவிக்கும் முயற்சி!

இதன் தொடர்ச்சியாக, இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து, கலாம் சேவை மையம், ஆதார் கார்டு திருத்த முகாம் நடத்துகிறது. முதலியார்பேட்டை தொகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அஞ்சல் துறையிடம் இதுதொடர்பாக வழக்கறிஞர் சம்பத் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்ற அஞ்சல் துறை, மக்களின் சிரமத்தை போக்கும் வகையில், கலாம் சேவை மைய தலைமை அலுவலகத்திலேயே ஆதார் திருத்த முகாம் நடத்த அனுமதி அளித்தது.

இதுவரை அரசு மட்டுமே நடத்தி வந்த இந்த முகாமை, அஞ்சல்துறையுடன் இணைந்து கலாம் சேவை மையம் நடத்துகிறது. தபால் நிலைய அதிகாரிகள் முன்னிலையில், கலாம் சேவை மைய நிறுவனரும் வழக்கறிஞருமான சம்பத், இந்த 2 நாள் முகாமை(29.12.2020, 30.12.2020 – தொடர்புக்கு: 94888 43327) தொடங்கி வைத்தார். தொகுதி மக்கள் ஏராளமானோர் இந்த முகாமுக்கு வந்து ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்துகொள்கின்றனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பயனாளிகள், எதையுமே வித்தியாசமாக, அதேநேரத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் கலாம் சேவை மையம் செய்யும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக, அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த எங்களது சிரமத்தை போக்க, இப்படி ஒரு அருமையான ஏற்பாட்டினை செய்த கலாம் சேவை மையத்திற்கும், அஞ்சல் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry