வார ராசிபலன்! குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்! இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி எட்டாக்கனிதான்!

0
62
Weekly Horoscope: Check Astrological prediction from September 11h to 17th September 2023 | PIXABAY

இந்த வார ராசிபலன் – செப்டம்பர் 11ல் இருந்து செப்டம்பர் 17 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : அயராத உழைப்பைக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற குணம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் 6ல் இருப்பதாலும், சுக ஸ்தான அதிபதியான சந்திரன் தேய்பிறை நிலையில் இருப்பதாலும், உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால், சிறு உடல் உபாதைகள் என்றாலும் அலட்சியம் காட்டாமல் கவனித்து விடுங்கள். வாகனங்கள் அடிக்கடி பழுதாகி அலைச்சல் தரும். விளையாட்டு, போட்டித் தேர்வுகளில் வெற்றி உங்கள் பக்கம் என்பதால், விளையாட்டுப் போட்டி, அரசு வேலை தொடர்பான தேர்வுகளில் தாராளமாக பங்கேற்கலாம். கல், மண், இரும்பு, மர வியாபாரம், தூய்மை பணிக்கு ஆட்களை ஏற்பாடு செய்து தரும் வேலை, தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. எண்ணெய் ஆலை, மரச்செக்கு எண்ணெய் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.

ரிஷபம் : அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாரம். பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பிரபலமடைவார்கள். இசைக் கருவிகளை பழுது நீக்குதல், விற்பனை, தயாரிப்பில் உள்ளவர்கள் ஏற்றமடைவார்கள். சுற்றுலா டிராவல்ஸ் உரிமையாளர்கள், ஆடம்பர சொகுசு வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள், சுற்றுலா விடுதி நடத்துபவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்கள், உறவினர்களுடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். மொத்தத்தில் கேளிக்கை அதிகரிக்கும் வாரம் இது. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும் சற்று கவனமாக இருங்கள். ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 11, 12 ஆகிய தேதிகளில் புதிதாகஅறிமுகமாகும் நபர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

Also Read : செவ்வாய்..! தோஷமா? யோகமா? இவங்களுக்கு எப்பவுமே செவ்வாய் தோஷம் இல்லையாம்! Sevvai Dosham simple explanation!

மிதுனம் : தந்திரமாகப் பேசி காரியங்களை முடிப்பதில் வல்லவரான மிதுன ராசிக்காரர்களே, 11ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை குடும்ப உறவுகள், தாய் வழியில் மனக்கவலை ஏற்படும். குடும்பத்தில் உள்ள பெண்கள் எடுக்கும் முடிவுகளில் விருப்பம் இல்லையென்றாலும் அதனைச் சொல்ல முடியாத நிலையில் இருப்பீர்கள். எதைச் செய்தால் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குச் சரியாக இருக்கும் என்று முடிவு எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். தொலைத்தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கமிஷன் மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் இழுபறிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையின் பூர்வீகச் சொத்து உங்களுக்கு கிடைக்கும். கடன் வாங்கி சொத்து வாங்குவீர்கள். முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கடகம் : உயர்ந்த குணம் கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசிநாதன் சந்திரன் ஆட்சி பெற்றாலும் அமாவாசை அமைப்பில் உள்ளதால் எந்தவொரு செயலையும், முடிவையும் விரைவாக மேற்கொள்ள வேண்டாம். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து விடுங்கள். கடக ராசி மாணவ, மாணவிகள் கல்வியின் மூலம் புகழடைவீர்கள். கடக ராசியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், ஆடிட்டர்களுக்குச் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை முன்னேற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் திட்டமிட்டு கச்சிதமாகச் செயல்படுவீர்கள். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வேலை, தொழில் ரீதியாகத் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 13, 14, 15 ஆகிய தேதிகளில் கவனமாக இருங்கள்.

Also Read : பத்துப் பொருத்தம் பார்த்தும் விவாரத்து ஆவது ஏன்? ஜோதிடம் பொய்யா?, ஜோதிடர்களுக்கு கணிக்கத் தெரியவில்லையா? Part – 1

சிம்மம் : மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ராசிநாதன் சூரியன் ஆட்சிப் பெற்று புதன் உடன் இணைந்து இருப்பது சிறப்பு என்றாலும், 13, 14, 15 ஆகிய தேதிகளில் விரையாதிபதி சந்திரன் உடன் சேர்க்கைப் பெறுவதால் செலவுகள் அதிகரிக்கும். தாயார், மனைவி வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் எந்தவொரு வேலையாக இருந்தாலும் பல முறைக்குப் பிறகே வெற்றி சாத்தியமாகும். அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது நல்லது. தந்தை – மகன் உறவில் மனக்கசப்புகள் உண்டாகும் என்பதால் தேவையற்றப் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கன்னி : செய்த உதவியை மறக்காத குணம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, பூர்வீக சொத்துகளால் மாமன் உறவுகளைப் பகைத்துக் கொள்ள நேரிடும். சிலருக்குக் கல்வியில் தடைகள் ஏற்படும். விரும்பிய பாடப்பிரிவுகள், எதிர்பார்த்த கல்லூரியில் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவது, கடனுக்கு உத்தரவாதம் தருவது கூடாது. வங்கி பணியாளர்கள், கல்வி மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான வாரம். ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை ஆலோசகராக இருப்பவர்களுக்குப் பணவரவு அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 16, 17 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

Also Read : ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

துலாம் : எதிரியையும் நேசிக்கும் குணம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, பணம் சம்பாதிப்பதில் இதுவரை இருந்த தடை விலகும். கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம், சன்மானம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இனித் தேவையில்லை. வெளியில் சிரித்தாலும் மனத்திற்குள் வருத்தப்பட்டு கொண்டிருந்த நிலை மாறும். வாகன ஓட்டுநர்கள், உணவு டெலிவரி செய்யும் வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்குவீர்கள். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை நம்ப வேண்டாம். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அரசு வேலை கிடைத்தாலும் விரும்பிக் கேட்டத் துறை, கேட்ட இடத்தில் பணி கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 13, 14, 15 ஆகிய தேதிகளில் தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

விருச்சிகம் : அடுத்தவர்களின் அறிவுரைகளை விரும்பாத விருச்சிக ராசிக்காரர்களே, சகோதரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீண்ட நாட்களாகத் தொல்லைக் கொடுத்த கடனை அடைக்க வழி பிறக்கும். கடனுக்காக கடன் வாங்கும் நிலை மாறி, சுய சம்பாத்தியத்தில் வட்டியும் பைசல் செய்வீர்கள். அடுத்தவர்களின் தயவு, உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் மலையேறிவிட்டது. இனி உங்கள் முயற்சியால் வெற்றியை வசமாக்குவீர்கள். வயதுக்கு ஏற்றவாறு படிப்பு, விளையாட்டு, வேலை, தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை மூலம் குழந்தைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகக் கடன் வாங்க நேரிடும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 16, 17 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

Also Read : நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!

தனுசு : கெளரவமான வாழ்க்கையை வாழ விரும்பும் தனுசு ராசிக்காரர்களே, ராசிநாதன் குரு வக்கிரமாக இருப்பதால், உங்களையே அறியாமல் அடிக்கடி கோபம் எட்டிப் பார்க்கும். ஆண் பிள்ளைகளின் செயல் எரிச்சலை உண்டாக்கும். சிலர் பூர்வீகச் சொத்தால் பிரச்னைகளை சந்திப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகப் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. விட்டுக் கொடுத்து போகவில்லை என்றால், அவமானங்களைச் சந்திக்க நேரிடும். கேட்டரிங் தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. ரெடிமேட் உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அதிக வட்டி, இரட்டிப்பு லாபம் என்று கவர்ச்சி விளம்பரங்களை நம்பி கையிருப்பை தொலைத்து விடாதீர்கள். 11, 12 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் சற்றுக் கவனமாக இருங்கள்.

மகரம் : எதிலும் சிக்கனத்தை விரும்பும் மகர ராசிக்காரர்களே, வாக்கு ஸ்தானத்தில் சனிபகவான் இருப்பதால், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருங்கள். வீடு, நிலங்கள் வழியில் பராமரிப்புச் செலவுகள் வந்து சேரும். தாய், தந்தையிடம் வீண் வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை நிமித்தமாக வெளிமாநிலம், கிழக்கு திசையில் உள்ள நாடுகளுக்கு சென்று வருவீர்கள். சித்த மருத்துவர்கள், தையற்கலைஞர்கள், ஃபேஷன் டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். 13, 14, 15 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் முன் யோசனையுடன் செயல்படுங்கள்.

Also Read : உங்கள் லக்னத்துக்கு ஏற்ற லக்கி கடவுள் யார்? இந்த நிற உடை அணிந்து வழிபட்டால் கைமேல் பலன்!

கும்பம் : சேவை மனப்பான்மை கொண்ட கும்ப ராசிக்காரர்களே, குடும்பம், படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்து விஷயங்களிலும் ஏழரை சனி பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். நூற்றுக்கு நூறு சதவீதம் கடினமான உழைத்தாலும், வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கும். பிறப்பு ஜாதகத்தில் யோக தசா, புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு பாதிப்பின் அளவு சற்று குறையும். மாறாக சுய ஜாதகத்தில் 6, 8 அதிபதியின் தசா, புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். வேலையில் பிரச்னைகள் என்று அலுவலகம் மாறினாலும் அங்கேயும் அதே பிரச்னைகள் இருக்கும். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். குறிப்பாக சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லுங்கள்.

மீனம் : பயணங்களில் விருப்பம் கொண்ட மீன ராசிக்காரர்களே, ராசிநாதன் குரு வக்கிரமாக இருப்பதாலும், சனிபகவான் ராசிக்கு 12ல் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும், 13, 14, 15 ஆகிய தேதிகளில் நிதானமாக இருங்கள். அவசரப்பட்டு வாக்குறுதித் தர வேண்டாம். கடன் எளிதில் கிடைக்கிறது என்பதற்காக வாங்கிவிட்டு பின்னர் கஷ்டப்படுவீர்கள். கடன் வாங்கினால் வட்டியுடன் சேர்த்து நாம் தான் கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் ஆசையை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். உடல் பருமன், உஷ்ணம் தொடர்பான உடல் உபாதைகள் அடிக்கடி வந்து தொல்லை தரும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 14, 15 ஆகிய தேதிகளில் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.

Recommended Video

சனாதனம் : உளறிக்கொட்டிய உதயநிதி! உண்மையை உடைத்த Aravind Subramanyam ! What is Sanātana Dharma?

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry