டெண்டர் எடுப்பதில் திமுக-வினர் இடையே தகராறு! மாவட்ட நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டதால் பதற்றம்!

0
17

சிவகங்கையில், குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான 3.50 கோடி ரூபாய் டெண்டர் எடுப்பதில் தி.மு..வினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டது.

சிவகங்கையில் குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக, தொண்டி ரோட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நேற்று டெண்டர் ஏலம் நடந்தது. மொத்தம், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், சிவகங்கை மாவட்ட கிராமப்புற குடிநீர் திட்ட பராமரிப்பில் 27 பணிகள், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் ஆறு பணிகளை டெண்டர் எடுக்க, திமுகவினர் திரண்டனர்.

டெண்டர் ஏலம் முடிந்து மாலை 4:00 மணிக்கு வெளியே வரும்போது, தி.மு.., மாவட்ட துணைச் செயலர் சேங்கை மாறன், கோவானூர் பகுதியைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர் சோமன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. சேங்கை மாறன் தரப்பு அங்கிருந்த நாற்காலியால் தாக்கியதில், சோமனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ”என்னை கொல்லும்படி சேங்கை மாறன் தரப்பினர் கூறியதோடு, சேங்கை மாறனும் தன்னை தாக்கினார்,” என்று சோமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சோமனின் ஆதரவாளர்கள் சேங்கை மாறன் தரப்பினரின் காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, காயமடைந்த சோமனை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி சேங்கைமாறன் கூறும்போது, ”டெண்டர் முடிந்து, மாலை 3:30 மணிக்கு அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், தனக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.’’  எந்த பிரச்னையும் ஏற்படாமல் டெண்டர் நிறைவு பெற்றது, அலுவலகத்திற்கு வெளியேதான் தகராறு நடந்துள்ளது என்று குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஐனான் கூறியுள்ளார்.

Also Read: அரசு வழக்கறிஞர் பணிக்கு பேரம்! வக்கீலிடம் பேசும் திமுக பிரமுகர்! ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

டெண்டர் நடந்த நிர்வாக பொறியாளர் அலுவலகத்திற்கு தபால் கொடுக்க சென்ற நடராஜன் என்ற தபால்காரரை கூட்டத்தில் இருந்த சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் மீது நிர்வாகிகள் பல்வேறு புகார்களை கூறுகின்றனர். இவரது மனைவி ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் உள்ளதால், தங்களுக்கு பிடிக்காதவர்களை இருவரும் பழிவாங்குவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களிலும் இவர்களது ஆதரவாளர்கள் வசூல் வேட்டை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry