‘தி ஹிந்து’ ஆங்கில நாளேட்டில் வெளியாகியுள்ள கட்டுரையின் சுருக்கும் வருமாறு:- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து உருவான அரசியல் நிச்சயமற்ற நிலையில் இருந்து, உச்சத்திற்கு வந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சித் தொண்டர்களின் விசுவாசத்தைப் பெற்று, போட்டியாளர்களை நடுநிலையாக்கி, அதிமுக மீதான தனது பிடியை உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியலைப் பொறுத்தவரை, தற்செயலான தலைவர்களாக உருவாகுபவர்கள், சூழ்நிலைகளால் அல்லது தங்கள் தலைவர்கள் தரும் பதவிகளால் வெளிச்சம் பெற்று இறுதியில் மறைந்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அலையை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் அல்லது தங்கள் அரசியல் தலைவர்களை விஞ்சுகிறார்கள்.
Also Read : செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல்! சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அரசியல் சதுரங்கத்தில் சரியான நகர்வுகளை மேற்கொண்டு, எதிராளிகளை செக்மேட் செய்யும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதியாவார். கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் ஆட்சி செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு, பாரதிய ஜனதாவை உள்ளடக்கிய அதிமுக கூட்டணியின் ஓட்டுனர் இருக்கையில் அவரை அமர்த்துகிறது.
அவரது அரசியல் வாழ்க்கையின் பெரும் பகுதியினுடைய எழுச்சி, மெதுவாகவும் நிலையானதாகவும் இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பொறுமையின்மை மற்றும் அரசியல் எதிரிகளை இரக்கமின்றி நடுநிலையாக்கும் விசித்திரமான திறன் ஆகியவற்றால் அவரது வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.
1989ஆம் ஆண்டில், 35 வயதில், எம்.ஜி.ஆர். மரணத்திற்குப் பிறகு, அதிமுகவின் ஒரு பிரிவுத் தலைவராக இருந்த தனது தலைவி ஜெயலலிதாவுடன் முதன்முறை எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற்கு அவர் சென்றார். அவரது தொகுதியின் பெயர், “எடப்பாடி” என்பதால், அவரது பெயருக்கு முன்னே அது இடம்பிடித்துவிட்டது. 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இணைவதற்கு முன்பு, மக்களவை எம்.பி.யாக (1998-99) அவர் சிறிது காலம் பணியாற்றினார்.
Also Read : சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு! வாகன ஓட்டிகள் குமுறல்! அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழல்!
வெல்ல வியாபாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய திரு. பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை இலாகாக்களை வைத்திருந்த அமைச்சராகவும், கேபினட் சீனியாரிட்டி வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்தவராகவும் இருந்ததால், ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருப்பதை விரும்பினார்.
டிசம்பர் 2016இல் ஜெயலலிதா இறக்கும் வரை, பெரும்பாலான அமைச்சரவை சகாக்களைப் போலவே ஊடக வெளிச்சத்திலிருந்து திரு. பழனிசாமி விலகியே இருந்தார். ஜெயலலிதாவின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்று அரசியல் வட்டாரங்களில் அப்போது கிசுகிசுக்கள் எழுந்தன. 1980களின் முற்பகுதியில், எம்.ஜி.ஆர் தன்னை நியமித்து அழகுபார்த்த கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில், ஜெயலலிதா இவரை நியமித்தார். பின்னர் கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2017ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் சி. வித்யாசாகர் ராவை சந்தித்தபோதுதான், திரு.பழனிசாமி தமிழ்நாட்டில் பிரபலமானார். நெற்றியில் பூசப்பட்ட திருநீறும், பற்கள் தெரியும் புன்னகையையும் தனது முத்திரையாகக் கொண்டு கிராமத்து மனிதனான அவர் வெற்றியை பணிவாக ஏற்றார்.
திரு. பழனிசாமி முதல்வராக பதவியேற்ற சூழ்நிலை பரபரப்பானது. “ரிமோட் கண்ட்ரோல்ட் முதல்வராக” பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, முதலமைச்சராக பதவியேற்க சசிகலா திட்டமிட்டிருந்தார். உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்றதால் சசிகலா பின்னடைவைச் சந்தித்தார். சில வெளிப்புற சக்திகளால் பன்னீர்செல்வம் தவறாக வழிநடத்தப்பட, அவர் கிளர்ச்சி செய்தார்.
அ.தி.மு.க.வின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள், பன்னீர்செல்வம் முகாமுக்கு செல்வதைத் தடுக்க, ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திரு.பழனிசாமி, சரியான நகர்வுகளை மேற்கொண்டார். ஒரு பெரும் பகுதி எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த தனது கவுண்டர் சமூகத்தின் ஆதரவைப் பெற்றார். சட்டமன்றத்தில் திரு. பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அவர் தனது பதவிக்காலத்தில் முழுவதுமாக நீடிக்கமாட்டார் என்று பலர் நம்பினர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை அவர் பொய்யாக்கினார்.
சசிகலா பெங்களூரு சிறைக்கு செல்வதற்கு முன்பு, ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி.யான தினகரன் தீர்மானித்தார்.
Also Read: அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive
திரு. பழனிசாமி, ஒரு பிறவி அரசியல்வாதி, டிடிவி தினகரன் தனது முதல்வர் நாற்காலிக்கு வருவதற்கு வெகுகாலம் ஆகாது என்பதை அவர் விரைவாக உணர்ந்தார். வெகுஜனத் தலைவர் இல்லை என்பதை அறிந்த அவர், தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு என்ன தேவையோ அதைச் செய்தார். அதுமட்டுமின்றி அவர்களுக்கான இருவேறு வாய்ப்புகளை அவர் முன்வைத்தார் – சசிகலா குடும்பத்திற்கு அடிபணிந்து, அவர்களின் தயவில் வாழுவது; அல்லது, தனது ஆதரவில் இருந்து அதிகார பலன்களை அனுபவிப்பது. இதனால் சசிகலா குடும்பம் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு 10 எம்.எல்.ஏ.க்கள் மூலம் அரசாங்கத்தை காப்பாற்றி, தினகரனை ஆதரிக்கும் 19 சட்டமன்ற உறுப்பினர்களின் கிளர்ச்சியை திரு.பழனிசாமி அடக்கினார். பிறகு, பன்னீர்செல்வம் மற்றும் திரு.பழனிசாமி ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் சமமான அதிகாரங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் அதிமுக இரட்டை தலைமைக்கு இடம் பெயர்ந்தது.
Recommended Video
டீசல் கொள்முதலில் மெகா ஊழல் | போக்குவரத்து கழக மெகா முறைகேடு | TN Transport Scam | CK Thulasidoss
மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், அமைச்சரவையில் துணை முதலமைச்சராக மறுவாழ்வு பெற்றதன் மூலம் திருப்தி அடைந்தார். ஆனால், திரு. பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்களையும், கட்சி நிர்வாகிகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், கட்சியில் தனது பிடியை உறுதிப்படுத்தவும் எல்லாவற்றையும் அமைதியாகச் செய்துகொண்டிருந்தார். இது 2021ல் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நினைத்த பன்னீர்செல்வத்தின் முயற்சியை முறியடிக்க அவருக்கு உதவியது.
பத்திரிகையாளர்களின் கேள்விகளை அவர் நம்பிக்கையுடன் கையாளத் தொடங்கினார், செய்தி சேனல்கள் மூலம் தம்மைப் பார்ப்பவர்களின் மனதுக்கு அவர் நெருக்கமானார். குறிப்புகள் இல்லாமல் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். இறுதியில், திரு. பழனிசாமியால் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு கடினமான நிலையைக் கொடுக்க முடிந்தது, மேலும் அதிமுக கூட்டணி 75 இடங்களை வென்றது. அதேநேரம் அதிமுகவின் இரட்டை தலைமை குறித்து அவர் எச்சரிக்கையாக இருந்தார். கட்சியின் பொதுக்குழுவில் குறைவான ஆதரவாளர்களைக் கொண்டிருந்த பன்னீர்செல்வம், தேர்தல் சீட்டு விநியோகம் தொடர்பான விஷயங்களில் விகிதாசார பலன்களைப் பெறுவதற்கு, தனது கூட்டு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
Recommended Video
அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத பட்ஜெட்~எண்ணும் எழுத்தும் திட்டத்தால் அரசு பள்ளிகள் நிலை கேள்விக்குறி!
எனவே, கடந்த ஜூலை மாதம், தனது ஆதரவாளர்களை ஒற்றைத் தலைமைக்கு இடம்பெயரச் செய்ததன் மூலம் திரு.பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது ஒரு அரசியல் சண்டை. ஆனால், பரிதாபகரமான எண்ணிக்கையில் தொண்டர்களை பெற்றிருந்த பன்னீர்செல்வம், இதை சட்டப் போராட்டமாக மாற்றினார். இது, திரு.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வழிவகுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பால், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று, பொதுச் செயலாளராக திரு.பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். பன்னீர்செல்வம் டிவிஷன் பெஞ்ச் முன்பு மேல்முறையீடு செய்துள்ளார்.
இப்போதுதான் அவருக்கு சவால் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக அவரது செயல்பாடு மேம்பட வேண்டும். நீண்டகாலம் நிலைத்திருக்க, அவர் ஆளும் தி.மு.க.வை தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது, தொண்டர்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அவர் தேவையானதைச் செய்ய வேண்டும்.
மூலக்கட்டுரை – The Hindu. தமிழில் சுருக்கமாக – ‘அம்மா’ கோபி
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry