அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive

0
128

சென்னையில் வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடியில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழக(எம்டிசி) பேருந்து நிலையம்முனையங்களை நவீனமயமாக்கம் என்ற பெயரில் தனியார்மயமாக்க பெருநகர போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட்  முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கெனவே சென்னை நகரில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தீவிரம் காட்டி வருகிறது.`மொத்த செலவு ஒப்பந்த’ முறையில் நடப்பாண்டில் 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டுக்குள் மேலும் 500 தனியார் பேருந்துகளையும் இயக்க ஒப்பந்தம் செய்யப்படவிருக்கிறது. முழுமையாகத் தனியாருக்கு வழங்க முடியாது என்பதால், இப்படி படிப்படியாக அரசு தனியாரை  நுழைக்கிறது என்பதே தொழிற்சங்கங்களின்
குற்றச்சாட்டு.

Recommended Video

டீசல் கொள்முதலில் மெகா ஊழல் | போக்குவரத்து கழக முறைகேடு | TN Transport Scam | CK Thulasidoss

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை, வணிக மேம்பாடு உள்ளிட்ட நவீனமயமாக்கலுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சென்னை முழுவதும் எம்.டி.சி.க்கு சொந்தமான பதினாறு பேருந்து நிலையங்கள் / முனையங்களை அடையாளம் கண்டுள்ளது.

இவற்றில் முதல் கட்டமாக, வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடியில் உள்ள டெப்போக்களை நவீனமயமாக்குதல் என்ற பெயரில் தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை மூன்றும், அரசு தனியார் பங்களிப்பு முறையில், டி.பி.எஃப்.ஓ.ட்டி அடிப்படையில் (டி.பி.எஃப்.ஓ.ட்டி – டிசைன், பில்ட், ஃபினான்ஸ், ஆபரேட் மற்றும் டிரான்ஸ்ஃபர் ) நவீனமயமாக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. வடபழனி பேருந்து நிலையம் / முனையத்தின் மொத்த பரப்பளவு 6.65 ஏக்கராகும். இங்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கான கட்டுமானத்துக்கு ஏலம் மூலம் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான மதிப்பு ரூ. 610 கோடியாகும்.

Also Read : எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்! வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு!

திருவான்மியூர் பேருந்து நிலையம் / முனையத்தின் மொத்த பரப்பளவு 2.98 ஏக்கராகும். இங்கு 89 ஆயிரத்து 977 சதுர கிலோ மீட்டர் அளவுக்கான கட்டுமானத்துக்கு ஏலம் மூலம் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான மதிப்பு ரூ.446.38 கோடியாகும். இதேபோல், வியாசர்பாடி பேருந்து நிலையம் / டெர்மினஸின் மொத்த பரப்பளவு 5.74 ஏக்கராகும். இங்கு ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 281 சதுர கிலோ மீட்டர் அளவுக்கான கட்டுமானத்துக்கு ஏலம் மூலம் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட
உள்ளது. இதற்கான மதிப்பு ரூ. 485 கோடியாகும்.

டெண்டரில் தேர்வாகும் ஒப்பந்ததாரர், பேருந்து நிலையம் – முனையத்தின் கட்டுமானம் மட்டுமல்லாது, அங்கே வணிக வளாகங்களையும் கட்டுவார்கள். கட்டுமானத்துக்கான காலமாக 3 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களுடன், இந்த மூன்று பேருந்து நிலையம் / முனையங்களும் 30 வருடங்களுக்கு தனியார் வசம் இருக்கும். போக்குவரத்துத்துறை குறிப்பிடும் நவீனமாக்கல் பணியானது, பேருந்து நிலையம்/முனையத்தை வணிக வசதிகள் உள்ளடக்கியதாக  நவீனப்படுத்துதல், ஒருங்கிணைந்த பேருந்து நிலைய உள்கட்டமைப்புத் திட்டத்தை உருவாக்குதல் போன்றவையாகும். அதாவது, வடிவமைப்பு, பொறியியல், நிதியுதவி,பேருந்து நிலையம் /முனையத்தின் கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள், வணிக வளாகத்தின் மேம்பாடு மற்றும் கட்டுமானம், வணிக வளாகம் மற்றும் முனைய வசதிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.

Also Read : தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை(ஆபரேஷன் & மெயின்டனன்ஸ்) ஒப்படைப்பது என்பது தனியார்மயமாக்குதலைத் தவிர வேறு என்ன? என்ற கேள்வி எழுகிறது. வணிக இடத்துக்கான கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை ஏலதாரர் வசூலித்துக்கொள்ளலாம். 
இதுபற்றி அரசுத் தரப்பில் கூறும்போது, “பேருந்து பராமரிப்புத் தளங்கள், பணியாளர்கள் வசதிகள், தற்போதைய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தேவை உருவாகியுள்ளது. இதற்கு பெரும் மூலதனச் செலவினங்கள் தேவைப்படுகின்றன.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் இதர பராமரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகள் காரணமாக இயக்கச் செலவும் அதிகரித்து, போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலை முடக்கியுள்ளது. எனவேதான்  அரசு – தனியார் பங்களிப்பு முறையில், டி.பி.எஃப்.ஓ.ட்டி அடிப்படையில் நவீனமாக்கும் முயற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 31/03/2018 நிலவரப்படி 2,254 உதிரி பேருந்துகள் உட்பட 21,744 பேருந்துகள் உள்ளன. மாநிலம் முழுவதும் 321 டெப்போக்கள் இருக்கிறது. இந்த டிப்போக்கள் பெரும்பாலும் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை போன்ற தமிழ்நாட்டின் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களின் முக்கிய இடங்களில் அமைந்துள்ளன. MTCஐ பொறுத்தவரை, 34 டிப்போக்களையும், 3 ஆயிரத்து 679 பேருந்துகளையும் கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 35.56 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.

Recommended Video

வைரமுத்து கருத்து முட்டாள்தனமானது! பெண்களை தரக்குறைவாக ஒப்பிடுவதா? Nachiyal Suganthi Interview

சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தற்போது 900 பேருந்துகள் குறைந்திருக்கின்றன. இந்த இடங்களில்தான் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். இதனூடே நவீனமயமாக்கல் என்ற பெயரில் டெப்போக்களும் தனியார்மயமாகின்றனவோ என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

கட்டுரையாளர் – கி. கோபிநாத், ஊடகவியலாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry