இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை ட்ரூகாலர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
சிறையிலிருந்து விடுதலையான 660 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா! காலை உணவு, கழிவறைகள் வசதிகள் கிடையாது!
சிறையில் தண்டனை முடிந்து வெளியான 660 பேருக்கு, சென்னையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ.சி. அறையில் நடைபெறுவதால், சுத்தமான ஆடைகள் அணிந்து அதாவது துர்நாற்றம் வீசாத ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று பயனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியை பிரித்து புதிய ஆள்தேர்வு வாரியம் அமைக்க திட்டம்! அரசுப் பணியாளர் தேர்வு முறை வலுவிழந்துவிடும் என பாமக கண்டனம்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தேசிய கீதம்..! திராவிட மாடல்..! சட்டம் ஒழுங்கு..! எப்படிப் பாராட்ட முடியும்? வெளிநடப்பு செய்தது ஏன்? ஆளுநர் ரவி விளக்கம்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு(04/MAY/2023) பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்த ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரைக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் வெளிநடப்பு செய்தது சரியா? முக்கிய தலைவர்களின் பெயர்களையும் விட்டுவிட்டீர்களே? என்று முதல் கேள்வியாக எழுப்பப்பட்டது.
‘தகுதியோ, யோக்கியதையோ இல்லை’! கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை வறுத்தெடுத்த தி.மு.க.! சைலன்ட் மோடுக்குப் போன சிபிஎம் தலைவர்கள்!
’தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்…’ என்று சொல்லும் தகுதியோ யோக்கிதையோ மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் போன்றோருக்கு இல்லை’ என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
