Saturday, March 21, 2026
Home Blog Page 226

எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் மறுப்பு! பொதுக்குழு வழக்கில் இருந்து விலகினார் நீதிபதி!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை, வேறு நீதிபதிக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று கண்டனம் தெரிவித்தார்.

மோசடிப் புகாரில் தனியார் நிதி நிறுவனம்! 21 இடங்களில் அதிரடி ரெய்டு! உரிமையாளர் வீட்டுக்கு சீல்!

வேலூரைத் தலைமையிடமாக கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்(IFS) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். 15 தினங்களாக இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதால் இதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2, 3 பணக்காரர்களுக்காக சர்வாதிகார ஆட்சி! கண் முன்னே இந்தியா அழிகிறது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் அக்கட்சி தலைவர்கள் ராஷ்டிரபதி பவனுக்கு பேரணியாக சென்றனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். காங்கிரஸ் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்! நாட்டுப்பற்று, தேச ஒற்றுமையை வளர்ப்போம் என ஈபிஎஸ் சூளுரை!

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது RBI! வீடு, வாகனக் கடன் வட்டி அதிகரிக்கும்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டம் கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக வட்டி விகித உயர்வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

உங்கள் செயல் கீழ்த்தரமாக உள்ளது! ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த ஐகோர்ட்!

கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

antalya bayan escort