கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்ப்பேட்டையை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பவர் கரும்பு வெட்டும் பணிக்கான மேஸ்திரியாக இருந்து வருகிறார். கரும்பு வெட்டும் சீசன் முடிந்ததும், கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு கறி விருந்து கொடுப்பது அவரது வழக்கம்.
சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது! உயிர் பயத்தில் அரசு அதிகாரிகள்! ஓபிஎஸ் கண்டனம்!
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு.
யு டியூபர் நிதி மோசடி வழக்கு! வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை! கஸ்டடி எடுக்க போலீஸ் தீவிரம்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருக்கடையூரில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்! கங்கை அமரன், பாரதிராஜா பங்கேற்பு!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சதாபிஷேகம் நடைபெற்றது.
கஞ்சா விற்பனை கனஜோர்! ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் அரசு கைகோர்ப்பு? ஊழல் செய்வதிலே முதன்மை!
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
500 ரூபாய் கள்ள நோட்டுகள் இரு மடங்கு உயர்வு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிய மத்திய அரசு, அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.
அதலபாதாளத்தில் கிரிப்டோ வர்த்தகம்! கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் தவிப்பு!
கிரிப்டோ கரன்சிகள் அதல பாதாளத்துக்குச் சரிந்திருக்கிறது. பிட்காயின் மதிப்பு 6 மாதங்களுக்கு முன்னர் ரூ.50 லட்சத்தை தாண்டியிருந்தது. மே 26-ம் தேதி இதன் மதிப்பு ரூ. 23.08 லட்சங்களாக சரிந்துள்ளது. பிட்காயின் மட்டுமன்றி மேலும் பல செல்வாக்கான கிரிப்டோகரன்சிகள் அவற்றின் மதிப்பில் பாதிக்கும் மேலாக வீழ்ந்துள்ளன.
