இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு, விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக தொழில் நிறுவனங்களில் விற்க வேண்டும், என மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.
வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக முழங்கிய ராகுல்! பழைய வீடியோவை வெளியிட்ட பாஜக!
தனக்கு தேவையானபோது மட்டும் ஆளுநரின் தடைகளை தகர்க்கும் முதல்வர்! கிரண்பேடியை வீழ்த்திய பட்டியலுடன் ஓர் அலசல்!
தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுநரை ஓரங்கட்டி, தான் நினைத்தை சாதித்து வருகிறார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி. இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல், ஆளுநர் மீது பழிபோட்டது ஏன் என்ற கேள்விக்கு விடை தேடலாம்.
வாழும் காமராஜர் தோழர் நல்லகண்ணு! பகட்டு அரசியல் தெரியாத பண்பான தலைவரை வணங்குவோம்!
சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடமைத் தத்துவத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான தோழர் நல்லகண்ணுவுக்கு இன்று 96-வது பிறந்த நாள். விலை உயர்ந்த கார்களில் வந்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களை, எளிமையின் சிகரமான நல்லகண்ணு, சிறிய புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார். அவரிடம் கொடுக்க வேறு என்ன இருக்கிறது?
கச்சத்தீவை தாரைவார்க்க எதிர்த்தவர்! மதுரை எய்ம்ஸுக்கு அறிவிப்பை வெளியிட்டவர்! மாமனிதர் வாஜ்பாயை போற்றுவோம்!
இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பா.ஜ.க.வின் அதீத வளர்ச்சியில் வாஜ்பாயை தவிர்த்துவிட்டு எந்தவொரு தலைவரையும் சுட்டிக்காட்ட முடியாது. காங்கிரஸ் அல்லாத தலைவராக 5 ஆண்டுகள் நிறைவு செய்த முதல் பிரதமர் வாஜ்பாய். மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளில், நாட்டுக்காக அவர் எடுத்த முக்கிய முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’-வுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை! அரசுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட திட்டம்!
‘கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கு, சில ஆண்டுகளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது. என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவே இவ்வளவு தொகை வரப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நடராஜனுக்கு ஒரு விதி, கோலிக்கு ஒரு விதியா? அஸ்வின் ஏன் ஒதுக்கப்பட்டார்? உண்மையை உடைத்த கவாஸ்கர்!
இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நம்பவில்லை என்றால், அஸ்வின், நடராஜனிடமே கேட்டுப் பாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கொதிப்புடன் கூறியுள்ளார்.
