நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?

0
64
Representative Image

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடியே 2 லட்சத்து 75,000 டன் பழுப்பு நிலக்கரி படிமங்கள் உள்ளன. இதனடிப்படையில், சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரிக்கு கிழக்கே நிலக்கரி படிமங்கள் இருப்பதை ஆய்வு மூலம் உறுதி செய்துள்ள மத்திய அரசு, அந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களையும் ஏலம் விட தீவிரமாக முயற்சிக்கிறது. நிலக்கரி சுரங்க ஏலத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது சுற்றுகளில் இந்த மூன்று ஊர்களும் இருந்தன.

ஏப்ரல் 11, 2022 தேதியிட்ட ஆவணத்தில், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியின் ஆய்வுச் செலவு ₹16,53,45,000 என்றும் ஏலத் தொகை ₹4,13,36,250 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் வடசேரி நிலக்கரிப் படுகைக்கு, மதிப்பிடப்பட்ட ஆய்வுச் செலவு ₹77,19,75,000, ஏலம் கேட்புத் தொகை ₹19,29,93,750 ஆக இருந்துள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நிலக்கரிப் படுகையின் கிழக்குப் பகுதிக்கான ஆய்வுச் செலவு ₹1,47,27,75,000 ஆகவும், ஏலத் தொகை ₹36,81,93,750 ஆகவும் இருந்தது.

Also Read : கள்ளச்சாராய விற்பனை அமோகம்! 2 பாக்கெட் வாங்கினால் முட்டை இலவசம்! தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

மூன்று நிலக்கரிச் சுரங்கங்களும் ஐந்தாவது ஏலத்தில் சேர்க்கப்பட்டு, பகுதி ஆய்வு செய்யப்பட்ட சுரங்கங்கள் பிரிவின் கீழ் ஏலத்தில் விடப்பட்டன. நவம்பர் 03, 2022 அன்று ஏலம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 03, 2022 தேதியிட்ட டெண்டர் ஆவணத்தின் ஷரத்து 3.3.2 (பி) (II) (iii) மற்றும் 9.6 ஆகியவற்றின் கீழ், யாரும் ஏலம் எடுக்க முன்வராததால், டெண்டர் செயல்முறை ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசு ஏழாவது சுற்று வணிக நிலக்கரி ஏல நடவடிக்கையை மார்ச் 29 அன்று தொடங்கியது. ஏழாவது சுற்று ஏலத்தில் 106 நிலக்கரி சுரங்கங்கள் இடம்பெற்றன. இதில், 61 தொகுதிகள் பகுதியளவும், 45 முழுமையாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கோக்கிங் அல்லாத 95 நிலக்கரி சுரங்கங்கள், 10 லிக்னைட் சுரங்கங்கள் மற்றும் ஒரு கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தை மத்திய அரசு ஏலத்தில் வைத்தது.
இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Michaelpatti & Vadaseri Lignite Block Map (Union Ministry of Coal)

விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார், நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான மத்திய அரசின் முடிவு ஒருதலைப்பட்சமானது, இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் மாநில அரசின் ஒப்புதலை பெறவில்லை என்றும் கூறினார். அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் மாநில அரசிடம் ஆலோசனை பெற்றிருந்தால், இந்த சிக்கல்களை தெளிவுபடுத்தியிருக்கலாம் மற்றும் அறிவிப்பால் ஏற்படும் தேவையற்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என்று முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Also Read : திமுக 2 ஆண்டுகள் ஆட்சி! தொடர்பில்லாமல் இருக்கும் கல்வி அமைச்சரின் அறிவிப்புகள்! தடுமாறும் கல்வித்துறை!

ஏப்ரல் 6ம் தேதி அன்று, காவிரி டெல்டா பகுதியில் (Cauvery Delta Zone – CDZ) உள்ள மூன்று நிலக்கரிச் சுங்கத் தொகுதிகளை ஏலம் விடுவதற்கான முடிவு திரும்பப் பெறப்பட்டதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் டிவிட்டரில் அறிவித்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட பல திட்டங்களைத் தொடங்குவதற்காக பிரதமர் மோடி சென்னை வருவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானது. இருப்பினும், இந்த அறிவிப்பு டிவிட்டரில் அளவில் மட்டுமே உள்ளது.

இந்த டிவிட்டர் அறிவிப்பைக்கூட, மாநில அரசின் ஆட்சேபனையால் திரும்பப் பெறுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறவில்லை. மாறாக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்ததாகவே பதிவிட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சரின் டிவிட்டர் அறிவிப்பு, விவசாயிகளை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “அமைச்சர் டிவிட்டரில் உறுதிமொழியை மட்டுமே அளித்திருக்கிறார், அதை ரத்து செய்யும் ஆணையாக கருத முடியாது. டிவிட்டர் அறிவிப்பை அரசாங்க உத்தரவாக எப்படி எடுத்துக்கொள்ளலாம்? டெல்டா மண்டலத்தில் நிலக்கரி ஏலம் இதுவரை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை. நிலக்கரி ஏலம் நிறுத்தப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read : சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

மேலும், “ஓஎன்ஜிசியை மட்டுமே இப்பகுதியில் குறைந்தபட்ச அளவில் செயல்பட அனுமதித்தோம். அதுவும் விவசாயத்தை பாதிக்கிறது என்பதை உணர்ந்து 2016ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் நிறுத்தப்பட்டது. நிலக்கரி ஏலத்தை விவசாயிகள் எதிர்க்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் தெரியாது. தமிழக எம்.பி.க்களும், அதிகாரிகளும் முதலமைச்சரை எச்சரிக்கத் தவறியுள்ளார்கள். நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான மத்திய அரசின் நடைமுறைகளுக்கு எதிரான தமிழக அரசின் தாமதமான நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்றும் பி.ஆர். பாண்டியன் கூறினார்.

தமிழகத்தின் 3 லிக்னைட் தொகுதிகள் ஏலத்தில் விடப்படாது என்று ஜோஷி டிவீட் செய்திருந்தாலும், மத்திய அரசால் வெளியிடப்பட்ட தொகுதிகளின் பட்டியலில் அவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் ஏலத்தில் இருந்து மூன்று தொகுதிகளை தவிர்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

கடந்த ஆண்டில் மூன்று முறை நிலக்கரிப் படுகைகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. மாநில அரசு இதை அறிந்திருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேநேரம் அரசு எப்படி இதுபோன்ற முயற்சிகளை அறியாமல் இருக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது. எம்.பி.க்களும், மாநில அரசு அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தனர்? மாநில அரசுடன் கருத்துப் பரிமாற்றம், கடிதப் பரிமாற்றம் செய்யாமல் நிலக்கரிப் படுகைகளை மத்திய அரசு ஏலத்தில் விட்டிருக்கு முடியுமா?

Also Read : பட்டம் பெறவந்த பட்டியலின மாணவன் ஜட்டிக்குள் கைவிட்டு…! அரை நிர்வாணமாக்கி அறையில் பூட்டி சித்ரவதை..! வழக்கில் சிக்கும் போலீஸார்!

அதிர்ஷ்டவசமாக, ஏலத்தில் எடுப்பவர்கள் இல்லாததால், நடவடிக்கை கைவிடப்பட்டது. யாராவது முன்பே ஏலம் எடுத்திருந்தால் என்ன செய்ய முடியும்? எதிர்க்கட்சிகளும் இதுபற்றி வாய்திறக்கவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில நிலக்கரித்துறை அதிகாரி ஒருவர், “நாட்டின் நிலக்கரி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டெல்டா பகுதியில் இருந்து நிலக்கரியை எடுக்க மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இந்த முறை மத்திய நிலக்கரி அமைச்சகம் டெல்டா நிலக்கரிப் படுகைகளை ஏலத்தில் இருந்து விலக்கலாம். ஆனால் அது மீண்டும் ஏலத்தில் விடப்படும். இந்தியாவின் நிலக்கரி இருப்புக்களில் 80 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதை வெட்டியெடுத்தால், அடுத்த 70 ஆண்டுகளுக்கு நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்” என்கிறார்.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான மத்திய அரசின் பிடிவாதம், வடசேரி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியது. நிலக்கரிப் படுகைகளை ஏலம் விடுவது தங்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர். நிலக்கரி சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயம் மட்டுமின்றி, மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். வீடுகள், கால்நடைகள், ஆறுகள் பாதிக்கப்படும். கிராமத்தை விட்டு அகதிகளாகத்தான் வெளியேற வேண்டியிருக்கும் என்பதும் விவசாயிகள் வேதனைக்குரலாக உள்ளது.

காவிரி டெல்டாவில் இருந்து நிலக்கரியை சுரங்கம் எடுக்க மத்திய அரசு விரும்புகிறது என்பதும், ஒவ்வொரு ஆண்டும் அது ஒரு பிரச்சனையாக மாறும் என்பதும் வெளிப்படையானது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். எதிர்காலத்தில் டெல்டா நிலக்கரிப் படுகைகளை ஏலத்தில் பட்டியலிடுவதற்கு நிரந்தரத் தடை விதித்து, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

With Inputs : The South First

Recommended Video

நிலக்கரி சுரங்கத்துக்கு ஒரு ஏக்கர் கூட எடுக்க முடியாது! Ma.Prakash, Cauvery Farmers Protection Union

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry