தமிழகத்தை உலுக்கும் புள்ளி விவரம்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு! தற்கொலையில் 2-வது இடம்!

0
97

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. 2021ம் ஆண்டில் இது 40 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

2020இல் 4,338 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 39.8 சதவீதம் அதிகரித்து, 2021 ஆம் ஆண்டில் 6,064 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4,465 வழக்குகள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்(போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளவை. இந்த எண்ணிக்கை நாட்டிலேயே நான்காவதாகும். இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளும் உறுதி செய்துள்ளன.

Image Credit : DT Next

கடந்த ஆண்டில் தமிழகத்தில் அறுபத்தொன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர், இதில் மூன்று பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பெண் சிறார்களுக்கு எதிராக 768 குற்றங்கள் பதிவாகி உள்ளன. சென்னையில்,2020ல் 306ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை, 2021ல் 546 வழக்குகளாக (435 போக்ஸோ வழக்குகள் உட்பட) உயர்ந்துள்ளது.

Also Read : கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு! சிக்கலில் சிறுமியின் பெற்றோர்? வசமாகச் சிக்கும் வழக்கறிஞர்கள், யூ டியூபர்கள்!

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் ஒரு மாநில அரசின் முதன்மைப் பணியாகும். அந்தக் கடமையைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலைகள் (ADSI – Accidental Deaths and Suicides) அறிக்கையின்படி, கடந்த ஆண்டை விட நாட்டில் தற்கொலைகள் 7.2% அதிகரித்துள்ள நிலையில், நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 22,207 தற்கொலை வழக்குகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 18,925 தற்கொலைகள் பதிவாகி 2-ம் இடத்தில் உள்ளது.

Image Credit : DT Next

பெருநகரங்களைப் பொறுத்தவரை தற்கொலைகளில் சென்னை 2-வதாக இருக்கிறது. டெல்லியில் 2,760 வழக்குகளும், சென்னையில் 2,699 தற்கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 16,883 தற்கொலைகளும், சென்னையில் 2,430 வழக்குகளும் பதிவாகியுள்ளன. குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாக நாட்டில் பதிவான 131 வழக்குகளில், 33 தற்கொலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

Also Watch : 8 வழிச்சாலை | திமுகவின் பல்டிகள் 🤣 | ஸ்டாலின் அன்று பேசியது; எ.வ. வேலு இன்று பேசியது

தமிழ்நாட்டில் தற்போது தற்கொலை விகிதம் 24.7% ஆக உள்ளது. இது 2020 இல் 22.2% ஆகவும், 2019 இல் 17.8% ஆகவும் இருந்தது. குடும்பப் பிரச்சனைகள், மனநோய், நீண்டகால நோய் மற்றும் திருமணப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல காரணங்களால் தற்கொலைகள் நிகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry