
இரும்பு சத்து குறித்து அறிந்திருப்பீர்கள், ஆனால் “ஃபெரிடின்”(Ferritin) என்பது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இரும்பு உங்கள் உடலில் தேவையான ஒரு முக்கிய சத்து. உங்கள் உடல், இந்த சத்தின் ஒரு பகுதியை ஃபெரிடின் வடிவத்தில் சேமித்து வைத்திருக்கிறது.
ஃபெரிடின் என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள ஒரு வகை புரதமாகும். இது உங்கள் உடலுக்கு தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக இரும்பை சேமித்து வைக்கும். உங்கள் உடலில் ஃபெரிடின் அளவு குறைவாக இருந்தால், அதற்கான காரணம் இரும்புச் சத்து குறைவாக இருக்கக்கூடும்.

ஃபெரிடின் குறைவாக இருக்கும்போது, முடி உதிர்வும் ஏற்படும். சிக்கலானது என்னவெனில், முடி உதிர்விற்கு காரணமாக இருக்கும் மற்ற அடிப்படை நிலைமைகளால், ஃபெரிடின் குறைபாடு தெரியாமல் போகலாம். ஃபெரிடின் சோதனை இதை சரியாக கண்டறிய உதவிடும், இதனால் சரியான முறையில் இதை சிகிச்சையளிக்க முடியும்.
ஃபெரிடின் மற்றும் முடி உதிர்வு காரணங்கள்
ஃபெரிடின் துகள்கள் கூந்தல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒருவருக்கு முடி உதிர்ந்தால், ஃபெரிடின் இழப்பு நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அதேநேரம், ஒரு நபருக்கு முடி உதிர்வு பிரச்சினைகள் ஏற்படும் முன்பே ஃபெரிடின் இழப்பு நடக்கலாம்.
Also Read : இனிப்பு எப்போது சாப்பிட வேண்டும்? சாப்பிடுவதற்கு முன்பா, பிறகா? Sugar and Digestion!
உடலில் இரும்பு சத்து குறைவாக இருக்கும்போது, உங்கள் உடல் ஃபெரிடினை, கூந்தல் மற்றும் பிற மிக முக்கியமில்லாத வளங்களிலிருந்து “கடன் வாங்கி” பயன்படுத்தும். உடலில் சரியான அளவு பெரிட்டினை உறுதிப்படுத்த, உணவுகளிலிருந்து அல்லது கூடுதல் மருந்துகளிலிருந்து போதிய அளவு இரும்பு சத்தை பெறுவது அவசியம்.
இரும்பு குறைவிற்கு அப்பாலும், குறைந்த ஃபெரிடின் அளவுக்கு பின்வரும் காரணங்களும் இருக்கக்கூடும்: அதிக ரத்த இழப்பு, சிலியாக் நோய், சிலியாக் அல்லாத குளூட்டன் ஒத்துக்கொள்ளாமை, சைவ உணவு அல்லது முழு சைவ உணவுகள், குறைந்த தைராய்டு (Hypothyroidism), மாதவிடாய், கர்ப்பகாலம்
ஃபெரிடின் (Ferritin) குறைவால் ஏற்படும் நோய்க்குறிகள்
ஃபெரிட்டின் குறைபாடு, சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிவப்பு இரத்த அணுக்கள் உங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருந்தால், உங்கள் உடல் உறுப்புகள் மற்றும் முக்கிய மண்டலங்கள் சரியாக செயல்பட முடியாது.

ஃபெரிடின் குறைபாடு நோய்க்குறிகள், இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறிகளுடன் ஒத்திருக்கின்றன. முடி கொட்டுதல் அவற்றில் ஒன்று. இதர அறிகுறிகள்: தலைசுற்றல், அதிகமான சோர்வு, காதுகளில் துடித்தல் உணர்வு, உடைய கூந்தல் மற்றும் நகங்கள், மூச்சுத்திணறல், தலையெழுத்து, கவனம் செலுத்துவதில் கடினம்.
ஃபெரிடின் மற்றும் தைராய்டு
ஹைப்போதைராய்டிஸத்தின் அடையாளங்களில் முதன்மையானது முடி உதிர்வதாக இருக்கலாம். மேலும், தைராய்டு ஹார்மோன் குறைவால், உடல் சோர்வு, உலர்ந்த தோல் போன்ற நிலை ஏற்படலாம். உடல் எடை அதிகரிக்கும்.
ஹைப்போதைராய்டிஸம் சில நேரங்களில் தைராய்டு ஹார்மோன்களின் பற்றாக்குறையுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்காது; ஆனால் இரும்புச்சத்து குறைவால் முடி உதிர்வு ஏற்படக்கூடும். இதனால், குறைந்த பெரிடின் மற்றும் ஹைப்போதைராய்டிஸம் ஒரே நேரத்தில் தோன்றும்.
உடலில் பெரிடின் சேமிப்பு போதுமான அளவில் இல்லாவிட்டால், தைராய்டு ஹார்மோனை போதுமான அளவில் தயாரிக்க முடியாது. தைராய்டு ஹார்மோன்கள் சாதாரண அளவிலுள்ளன என்று பரிசோதனை முடிவுகள் காட்டிலும், ஹைப்போதைராய்டிஸம் அறிகுறிகள் இருந்து கொண்டிருக்கும். இந்த நிலையில், ஃபெரிடின் அளவை பரிசோதிக்க வேண்டும்.
Also Read : நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் அவசியம்? Vitamin B6 உள்ள உணவுகள் எவை?
ஃபெரிடின் மற்றும் முடி உதிர்வு சிகிச்சை
ஃபெரிடினைக் கொண்டு முடி உதிர்வை நிறுத்துவதற்கான சிகிச்சைக்கு சிறந்த வழி, உங்கள் இரும்பு சத்து அளவை அதிகரிப்பது தான். இப்படியான நிலையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும். இல்லாவிடில், இரும்புச் சத்துக்கான சப்பிள்மெண்டுகளை பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கேட்கலாம்.
தாவர அடிப்படையிலான உணவுகளை விட இறைச்சியில் அதிக அளவில் இரும்பு சத்து இருக்கும். முழு தானியங்கள், விதைகள், மற்றும் பீன்ஸ் போன்றவற்றிலிருந்தும் குறைந்தளவு இரும்பு சத்து பெறலாம். வைட்டமின் C அதிகமுள்ள உணவுகளை இரும்பு நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலானது இரும்பு சத்தை கிரகித்து கொள்வதற்கு உதவும். Gluten intolerance சில நேரங்களில் இரும்பு சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும், இது குறைந்த ஃபெரிடின் மற்றும் முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம்.
வைட்டமின் D குறைபாடு முடி உதிர்வுடன் தொடர்புடைய மற்றொரு காரணமாக இருக்கலாம். உங்களுக்கு போதுமான சூரிய ஒளி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் விட்டமின் D நிறைந்த உணவுகளை எடுத்துக்காட்டாக முட்டை, சீஸ், மற்றும் கொழுப்புச்சத்து அதிகமான மீன்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிங்க் (Zinc) குறைபாடும் முடி உதிர்வுக்கு காரணமாகிறது. மாட்டு இறைச்சி, முழு தானியங்கள், மற்றும் பால் பொருட்களில் சிங்க் கிடைக்கிறது.
பெரிட்டின்(Ferritin) குறைவு காரணமாக உங்களுக்கு முடி உதிர்வு இருந்தால், இரும்பு சத்து பற்றாக்குறை சரிசெய்யப்பட்ட பிறகு உங்கள் முடி மீண்டும் வளர வாய்ப்புள்ளது. இருப்பினும், முடி மீண்டும் வளர பல மாதங்கள் ஆகக்கூடும், எனவே பொறுமை அவசியம். உங்கள் மருத்துவர் வழிகாட்டாமல் எந்த முடி வளர்ச்சி சிகிச்சை முறையையும் பயன்படுத்த வேண்டாம்.
அபாயங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்
உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சரியான அளவு இரும்பு சத்து மிக முக்கியமானது. அதேநேரம் இரும்புச்சத்தின் அளவு மிகுதியானால் அது எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தலாம். மேயோ கிளினிக் அறிக்கையின் படி, பெண்களுக்கு சாதாரண Ferritin அளவு மில்லிலிட்டருக்கு 20 முதல் 200 நானோ கிராம், ஆண்களுக்கு 20 முதல் 500 நானோ கிராம் வரை இருக்கும்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இரும்புச் சத்து சப்ளிமெண்ட்சை எடுக்கும்போது, வயிற்று வலி, கருப்பு அல்லது இரத்தம் கலந்த மலம், வாந்தி, எரிச்சல், இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்தம் குறைதல் மற்றும் கல்லீரல் செயலிழப்பு வரை நேரிடலாம். எனவே, மருத்துவரை அணுகாமல் Ferritin குறைவாக உள்ளது என்பதற்காக எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. Ferritin குறைபாடுகளை கண்டறிய ஒரே வழி இரத்த பரிசோதனையே. முடி உதிர்தலுக்கு ஃபெர்டின் குறைபாடும் ஒரு காரணமே தவிர, இது மட்டுமே காரணமல்ல.
உணவு முறைகளை மாற்றிய பிறகும் தலைமுடி கொட்டுதல் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிய வேண்டும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், விளையாட்டுகள், மற்றும் முறையான தூக்கம் ஆகியவை உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உணவு மாற்றங்களும், மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளும் வேலை செய்யக் குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகும் தலைமுடி கொட்டுதல் குறையவில்லை எனில், உங்கள் Ferritin மற்றும் இரும்பு அளவை மீண்டும் பரிசோதிக்குமாறு மருத்துவரிடம் கேளுங்கள்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry