இதற்கு முன்பாக ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது. கிரைண்டர் வந்தபின்பு, ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளானது. தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இன்ஸ்டன்ட் இட்லி, தோசை மாவு வந்த பிறகு கிரைண்டரும் காட்சிப் பொருளாகிவிட்டது.
தமிழ்நாட்டை பொருத்தவரையில் பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இட்லி, தோசைதான் இருக்கிறது. இட்லி தான் சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. நோயாளிகள் முதல் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட திட உணவாக இட்லியை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. இட்லியில் கார்போஹட்ரேட், புரதம் போன்ற முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன.
Also Read : நுரையீரலை இயற்கையாகவே சுத்தம் செய்யும் உணவுகள் எவை? சுவாசப் பிரச்சனை, புற்றுநோய்க்கு விடைகொடுக்க தயாரா?
வீட்டில் மாவு அரைத்து சமைத்த காலம் போய், எளிதாக கடைகளில் கிடைக்கும் பாக்கெட் மாவுகளையே அதிகமானோர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். சில குடும்பங்கள் தினமும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் இருக்கும் ஆபத்துகள் பற்றி நமக்குத் தெரிவதில்லை. அதுமட்டும் தெரிந்தால், இனி வாங்கவே மாட்டீர்கள்.
பாக்கெட்டுகளில் இருக்கும் இட்லி, தோசை மாவு புளித்துவிட்டால், 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்கவும், புளிப்பு சுவை வராமல் இருக்கவும் பாக்கெட்டில் மாவை சேர்ப்பதற்கு முன், அந்தக் கவரில் போரிக் அமிலம் தடவப்படுகிறது. இது நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாடவும் பயன்படுத்துவதாகும். நாம் ஏமாந்துப்போய் அதனை வாங்கி சாப்பிடுகிறோம்.
போரிக் அமிலம் உள்ள பாக்கெட்டுகள் இருக்கும் மாவை வாங்கி சாப்பிடுவதால், குடலில் பாதிப்புகள் ஏற்படும். கடுமையான வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும். மாவு புளித்துப் போகாமல் தவிர்க்க, கால்சியம் சிலிக்கேட் என்ற ரசாயன பொருளும் சேர்க்கப்படுகிறது. இதனால் குடல் பிரச்சனை, சீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்களை, 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால், அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி(ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்ணம், வாய் துர்நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.
Also Read : இருட்டான ரூமில் தூங்குவதன் அவசியம் பற்றி தெரியுமா? நைட் லேம்ப் போட்டுக்கொண்டு தூங்கக் கூடாதா?
அரிசி மாவில் உளுந்தை குறைத்துக் கொண்டு மரவள்ளி கிழங்கின் கழிவுகளை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், கடைகளில் விற்கப்படும் மாவில் சுத்தமான தண்ணீர் கலந்து அரைக்கப்படுகிறதா? என்றும் நமக்கு உறுதியாக தெரியாது. அதேபோல, மாவு ஆட்டுகின்ற போதும், கிரைண்டரை கழுவும்போதும் எந்தத் தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுகிறது என்றும் தெரியாது. சுத்தமான தண்ணீரை கொண்டு கல்லைக் கழுவாவிட்டால், ஈகோலி என்ற பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும்.
இந்த ஈகோலி (E-COLI) எனப்படும் பாக்டீரியாவானது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும். மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் இது கொஞ்சமாவது கட்டுப்படும். மாவை வேக வைத்தாலும் கூட, ஈகோலி பாக்டீரியாக்கள் முழுமையாக அழியாது. இந்த பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாய்ஸன் ஏற்படுத்தும். மேலும், நாள்பட வயிற்று வலி, உடல் வறட்சி, இரைப்பை நோய் உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.
எனவே, நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்.
வீட்டிலேயே மாவு அரைத்தாலும், 1 வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்தால், அந்த மாவு குடலில் இயற்கையான நுண்ணியிரிகளை வளர விடாது. கெட்ட பாக்டீரியாவை வளரச் செய்யும். இதனால் வீட்டில் மாவு அரைத்தாலும், 2 நாட்களுக்கு மேலாக அதை ஃப்ட்ரிஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry