கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ திட்டம்? முன் ஜாமின் கேட்டு மனு!

0
494

விசா முறைகேடு வழக்கில் தனது ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா வழங்க, கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சீனர்கள் 263 பேருக்கு விசா வழங்கப்பட்டதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையொட்டி ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சிபிஐ கடந்த 17-ந் தேதி சோதனை நடத்தியது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தது. அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Also Read: ரெய்டு முடிந்த சூட்டோடு ஆடிட்டர் கைது! கார்த்தி சிதம்பரம் வழக்கில் பிடியை இறுக்கும் சிபிஐ!

இந்நிலையில் விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். பாஸ்கர் ராமனிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry