கட்சி மாறும் எண்ணம் இல்லை! புதுச்சேரி காங்கிரஸ் மூத்த தலைவர்  AKD ஆறுமுகம் விளக்கம்!

0
38

என்.ஆர். காங்கிரஸில் இணைய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான AKD ஆறுமுகம் விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தமக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என AKD ஆறுமுகம் அதிருப்தியில் இருப்பதையும், அவர் என்.ஆர். காங்கிரஸில் இணையலாம் அல்லது தனி அமைப்பு சார்பில் கூட்டணி பலத்துடன் கதிர்காமம் அல்லது இந்திரா நகர் தொகுதியில் களமிறங்கலாம் என கடந்த 26-ந் தேதி வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது.

Also Read: முகாம் மாறும் AKD ஆறுமுகம்! பலவீனமடையும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி!

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள AKD ஆறுமுகம், கட்சியில் அதிருப்தி இருக்கிறது என்பதை சூசகமாக ஒப்புக்கொண்டார். தான் என்.ஆர். காங்கிரஸுக்கு வர விருப்பம் தெரிவித்தால், தங்கத் தட்டில் ஏந்தி வரவேற்க அவர்கள் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த தான், ஒருக்காலும் கட்சி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். முதலமைச்சர் நாராயணசாமியுடன் சகோதரன் போல பழகிவரும் தான், எப்போதும் அவரிடம் பதவிக்காக கோரிக்கை விடுத்ததில்லை, அவரிடம் இருந்து ஒதுங்கியிருக்கும் எண்ணமும் இல்லை  எனவும் விளக்கம் அளித்துள்ளாார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry