Wednesday, February 18, 2026
Home Blog Page 150

டாணாக்காரன்…! போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் கொடூரம்! இயக்குநர் தமிழ், நாயகன் விக்ரம் பிரபுவுக்கு ஷொட்டு!

சாதி ஏற்றத்தாழ்வை மெல்லிய கோடாக வரைந்து, அதன் மேல் போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் கொடுமைகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது டாணாக்காரன்.

பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? திராவிட மாடல் அரசு என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிந்து வைத்துள்ளாரா? என ஐபெட்டோ கேள்வி?

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஆசிரியர்கள் சங்கங்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண்பதாக ஒப்புதல் அளித்துள்ள 12 கோரிக்கைகளில் கணினி பணியாளர் நியமனத்தைத் தவிர வேறு எதையும் அறிவிக்கவில்லை, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாடு எவரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் கட்டுப்பாடற்றது கிடையாது! மத விவகாரங்களில் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது! ஐகோர்ட் கண்டிப்பு!

திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து, இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் இரு மடங்காக உயர்வு! அடுத்தடுத்த கட்டண உயர்வுகளால் மக்கள் கொந்தளிப்பு!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் (Tangedco) வசூலிக்கப்படும் இதர கட்டணங்களை உயர்த்தியுள்ளதால், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் நுகர்வோர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! புதுச்சேரி பாஜக நிர்வாகி ‘விசிசி’ நாகராஜன் மீது நடவடிக்கை! சாமிநாதன் அதிரடி!

புதுச்சேரி மாநில தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவிசிசிநாகராஜன், ஊடக பொறுப்பாளர் (Media Incharge) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போன்று நிறம் மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் ஐகோர்ட் கடும் கண்டனம்!

2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

4 ஆண்டுகளில் டீசல் வாகனங்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு எரிசக்தி மாற்றத்திற்கான குழு பரிந்துரை!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பெருமளவு இயங்குகின்றன. அதே நேரத்தில், மின்சார வாகனங்களின் சகாப்தம் தொடங்கியுள்ளது. மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், டீசல் வாகனங்களை தடை செய்வது குறித்து விவாதம் நடந்து வருகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை அரசு இன்னும் ஏற்கவில்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

antalya bayan escort