மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கிற, நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் சிவக்குமார், மேகேதாட்டுவில் அணை கட்டிய தீருவோம்; அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் உச்சநீதிமன்ற தீர்ப்பை குழிதோண்டி புதைப்பதற்கு சமமானதாகும்.
கருணாநிதியின் அரசாணையை நிராகரிப்பது நியாயமா? அரசுக்கெதிரான மனக்குமுறலை வெளிப்படுத்தும் அரசு மருத்துவர்கள்!
“2009-ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில், அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்து வருவது வேதனையாக உள்ளது” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மூடுவிழா? பெற்றோர், கல்வியாளர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் (மழலையர் வகுப்புகள்) கைவிடப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில், நடப்பாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பதக்கங்களை கங்கையில் வீசிவிட்டு, சாகும் வரை உண்ணாவிரதம்! மல்யுத்த வீராங்கனைகள் அதிரடி அறிவிப்பு!
“ஒலிம்பிக் உள்பட சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மழை இன்றும் பெய்தால் ஐபிஎல் கோப்பை யாருக்கு? அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்!
16-வது ஐ.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும், ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.
10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து! தமிழக அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்!
சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில், 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து உள்ளதால் பேராசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.