இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட இந்த கோர விபத்து, ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
மின் கட்டணம் மீண்டும் உயருகிறது? ஜுலை 1 முதல் 4.7% அதிகரிக்கப்படலாம் என தகவல்!
நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த தமிழக மின் வாரியம் தீர்மானித்தது. அதற்காக, 2022 ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது. மக்களிடம் கருத்து கேட்ட பின், கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல், 35 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது.
பிளஸ் 2 விடைத்தாளில் பெரும் குளறுபடி! கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியது அம்பலம்! பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13 ம் தேதி முதல் ஏப்ரல் 3 ம் தேதி வரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, மே 8 ம் தேதி தேர்வுத்துறை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை! அனைத்து பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்ச்சி அவசியம்!
2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் எனவும் நீதிமன்றம் தனது ஆணையில் கூறியுள்ளது.
அமைச்சர் பொன்முடி Tongue Slip ஆகி Loose Talk விடுகிறார்! தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் விமர்சனம்!
இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கல்வி வளர வேண்டும். கல்வி வளர்வதற்கு நீங்கள்தான்(ஆசிரியர்கள்) காரணமாக இருக்கிறீங்க. உங்கள் கையில் தான் இருக்கு. நாங்கள் என்னதான் மேடையில் பேசிட்டு போனாலும் அங்க போய் மாணவர்களை பார்த்து சொல்லித்தருபவர்கள் நீங்கள் தான்.
ஆவினுக்கு அச்சுறுத்தலாக நிற்பது அமுலா? பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களா? நடைமுறைச் சிக்கலா?
தமிழ்நாட்டின் கிராமப் பொருளாதாரத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கியப் பங்குவகிப்பது பால் உற்பத்தி. விவசாயம் கையைச் சுடுகிறபோதெல்லாம் விவசாயிகளைக் காப்பாற்றும் காமதேனுவாகக் கறவை மாடுகளே உள்ளன.