2023ஆம் ஆண்டு இறுதிக்குள், நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் 3,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை மாற்றாவிட்டால், கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கங்கள் எச்சரிக்கின்றன.
சாதாரண வெந்தய டீ-யில் இவ்வளவு மருத்துவ குணங்களா? 20 Incredible Benefits Of Fenugreek Tea + How To Make It?
ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் நீக்கமற இருக்கும் பொருள் தான் வெந்தயம்.இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தெரியும். அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது.
ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள்? ஊதியம் வழங்கவில்லை எனப் போராட்டம்! அமைச்சர் விளக்கத்தால் பரபரப்பு!
சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில், சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜிங் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்பதை உடனடியாக நீக்குங்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி தொடங்கிய காலத்தில் இருந்து, அந்தப் பதவி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் புலனப் பதிவுகள் வழியாக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் அன்றைய முதன்மைச் செயலாளர்-1 த.உதயசந்திரன் இ.ஆ.ப., ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.
கள்ளச்சாராயம், சட்டவிரோத பார்களுக்கு ஆதரவு! அமைச்சர் செஞ்சி மஸ்தானை உடனடியாக நீக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்..! கங்கையே சூதகமானால் என்ன செய்வது? என்பதற்கு ஏற்றார்போல், தற்போது நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
நீதிமன்றத்திற்குள் புகுந்து எதிரியை சரமாரியாக வெட்டிய ரவுடி! கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு!
ராமநாதபுரம் சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.