Thursday, February 19, 2026
Home Blog Page 188

பெண்களை கொச்சைப்படுத்திய உதயநிதிக்கு அமைச்சர் பதவியா? விலைவாசி உயர்வுக்கு முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும்!

திமுக அரசைக் கண்டித்து சென்னை மயிலாப்பூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போதைக்கு பாஜக-வை ஒன்றும் செய்துவிட முடியாது! மோடியின் வலிமையை ராகுல் உணரவில்லை என பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவான, சக்தியுள்ள கட்சியாக இருக்கும், மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார் அது நடக்காது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்

கீழடி பற்றி எழுத என்ன தகுதி இருக்கிறது? தொலைக்காட்சி விவாதத்துக்குத் தயாரா? எம்.பி., சு.வெங்கடேசனுக்கு விவசாயிகள் சங்கம் சவால்!

முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பற்றி எழுதவோ, குரல் கொடுக்கவோ மறுக்கும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திரு சு.வெங்கடேசனுக்கு ஒரு மனந்திறந்த மடல்” என்ற தலைப்பிலான அறிக்கையில் அவர் சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

கருத்தரித்தல் தள்ளிப்போகிறதா? இந்த உணவுகள் கண்டிப்பாக பலன் தரும்! Fertility Foods!

இன்றைய பெண்களின் உணவு பழக்கம் தீங்கு விளைவிப்பதாக இருப்பதால், அவர்கள் கர்ப்பம் அடைய படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது. குழந்தையின்மை பிரச்னையை போக்க, ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவி! ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழுநேரத் தலைவர்! தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் பொறுப்பிலிருந்து நந்தகுமார் இ.ஆ.ப மாற்றப்பட்டதாலும், அந்தப் பொறுப்புக்கு இதுவரை வேறு எவரும் அமர்த்தப்படாததாலும் பள்ளிக் கல்வித் துறையில் ஆணையர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் இயக்குநர் பதவி ஏற்படுத்தப்பட இருப்பதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read : பள்ளிக்கல்வி ஆணையர் மாற்றத்துக்கு வரவேற்பு! ஆணையர் பணியிடத்தை ரத்து செய்யுமாறு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. அது நிறைவேற்றப்பட வேண்டும்.பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் நீக்கப்பட்டு, அதன் பொறுப்புகள் அனைத்தும் பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டபோதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. பள்ளிக்கல்வி இயக்குநர் என்பது அதிகாரம் சார்ந்த பணியல்ல. மாறாக அனுபவம் சார்ந்த பணியாகும்.

சாதாரண ஆசிரியராக பணியைத் தொடங்கும் ஒருவர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இணை இயக்குநர், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குநர் என, பல்வேறு பொறுப்புகளை சுமந்து, அவற்றில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தான் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பை நிர்வகிக்க முடியும்; இ.ஆ.ப. அதிகாரிகளால் நிர்வகிக்க முடியாது என்று கூறியிருந்தேன்.

பள்ளிக் கல்வித் துறையில் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற பல குழப்பங்களுக்கு, ஆணையரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். இனியும் அத்தகைய குழப்பங்கள் நடக்கக் கூடாது. அதை உறுதி செய்வதற்காக பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை நீக்கிவிட்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும். பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநருக்கு வழங்கப்பட வேண்டும். அந்த இடத்தில் அனுபவம் உள்ள நேர்மையான அதிகாரி அமர்த்தப்பட வேண்டும்.

Also Read : கள்ளச்சாராய மரணம்! முதல்வர் ராஜினாமா செய்ய ஈபிஎஸ் வலியுறுத்தல்! டிரெண்டிங்கில் #ராஜினாமாசெய்_ஸ்டாலின் ஹேஷ்டேக்!

பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதவியும் காலியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழுநேரத் தலைவர் இல்லாததால் வாரியம் முடங்கிக் கிடக்கிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உடனடியாக முழுநேரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும்” என்று மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

ராஜராஜ சோழன் பிறந்தது எங்கே தெரியுமா? அந்த ஊர் தற்போது எப்படி இருக்கிறது?

மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039 ஆம் ஆண்டு சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் விவகாரத்தில் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தி! தீட்டிய மரத்தில் கூர்பாயும் கிரண்பேடி!

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தி ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு முழுவீச்சில் அமல்படுத்தப்படுவதால், பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இவை தேர்தலில் பிரதிபலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

antalya bayan escort