சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.
டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்! Amazon, Flipkartக்கு போட்டியாக வழங்கப்படும் ஆஃபர்கள்!
ஆன்லைன் விற்பனையில் இல்லாத நிறுவனங்களை ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறையில் வர்த்தகம் செய்வதற்கான கட்டமைப்பை டாடா குழுமம் உருவாக்கியுள்ளது. தற்போது டிஜிட்டல் வர்த்தகங்கள் அனைத்தையும் ஓரே தளத்தில் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சி தான் சூப்பர் ஆப்.
நாம் தமிழர் கட்சியினர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டத்தில், கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை: உங்கள் ஆரோக்கியத்திற்கான ஒரு அத்தியாவசிய முதலீடு!
உடல் பரிசோதனை என்பது எந்தவொரு மருத்துவரைச் சந்திப்பதற்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு செயல்முறையாகும். இது உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா, அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாகும்.
ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்ய முயற்சி! மெட்ரோ ரயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரெயில் லிட்., – கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்.
விதைக்கப்பட்ட சந்தேகம் உண்மையாகிறதா? வேளாண் சந்தையில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்! ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அதானி!
டெல்லி எல்லையில், போராட்ட களத்தில் விவசாயிகள் உறுதியாய் இருக்க, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வேளாண்துறையில் இறங்கியிருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலை அச்சம் விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.
Odisha Train Accident: 280க்கும் அதிகமானோரை பலிகொண்ட கோரமான ரயில் விபத்து! தமிழர்கள் 35 பேர் பலியானதாக தகவல்!
இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட இந்த கோர விபத்து, ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
