காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை மூடி பஞ்சாபி தாபா ஹோட்டலை திமுக பிரமுகர் நடத்தி வந்துள்ளார். 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டுள்ளனர்.
பொய் வழக்கு போட்டு போலீஸ் துன்புறுத்துகிறது! கதறும் பழங்குடி மக்கள்!
திருட்டு வழக்குப் போட்டு போலீசார் துன்புறுத்துவதாக பழங்குடியின மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
வார விடுமுறைக்கு ஏற்ற தினம் ஞாயிறு மட்டுமா? வெள்ளி, சனிக்கு மாற்ற மத்திய அரசு பரிசீலிக்குமா?
வார விடுமுறை தினம் என்றாலே ஞாயிற்றுக் கிழமைதான் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலேயர்கள் தங்கள் வழிபாட்டுக்கு வசதியாக நிர்ணயித்துக் கொண்டதொரு தினத்தை, நாம் ஏன் இன்னமும் பின்பற்ற வேண்டும்?
இலங்கையில் உணவுப்பஞ்சம்! அரிசி கிலோ ரூ. 448, பால் லிட்டர் ரூ.263, ஒரு முட்டை ரூ.28! தவிக்கும் மக்கள்!
கொரோனாவைத் தொடர்ந்து இலங்கையில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகியிருக்கிறது. அரசாங்கத்தின் டாலர் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அத்தியாவசியமான எரிபொருளைக் கொள்முதல் செய்யக்கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை.
அரசின் குறிக்கோள் தொழிற்பேட்டையா?, இரும்புத்தாதா? 1,200 ஏக்கர் விளை நிலத்தை வாரிச்சுருட்டப்போகும் தமிழக அரசு!
1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, பத்துக்கு மேற்பட்ட கிராமங்களின் 500 வீடுகளை தகர்த்து, ஏரிகளையும், ஓடைகளையும் நிர்மூலமாக்கி திருவண்ணாமலையில் திமுக அரசு சிப்காட் அமைக்கிறது. விளை நிலத்தை காப்பதற்காக மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? மனிதநேயமின்றி செயல்படும் பள்ளிக்கல்வி ஆணையர்! கூனிக்குறுகுவதாக குமுறும் ஆசிரியர்கள்!
90% விழுக்காடு பெண் ஆசிரியர்கள், கலைஞர் நீண்டகாலமாக சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பணிச் சுமையால் அவர்கள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஐ.சி.யு.-வில் காங்கிரஸ்! உ.பி.யில் 387 இடங்களில் டெபாசிட் காலி! மக்கள் நிராகரித்த மத அரசியல்! விஸ்வரூபமெடுக்கும் ஆம் ஆத்மி!
ஐந்து மாநில தேர்தலில் பெற்ற மோசமான தோல்வியால், காங்கிரஸ் பல வகையிலும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. காங்கிரஸ் முன்வைத்த சாதி – மத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்ட நிலையில், குலாம் நபி ஆஸாத், கபில் சிபல் உள்பட அதிருப்தி தலைவர்கள்(G23 தலைவர்கள்) சோனியா காந்தியின் தலைமைக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.