Sunday, February 15, 2026
Home Blog Page 34

எள்ளின் பயன்களும், மருத்துவ குணங்களும்! கருப்பு vs வெள்ளை எள்: எது சிறந்தது?

ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எள்ளில் அதிக காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜிங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது. எள் சாப்பிடுவது எலும்புக்கு வலு சேர்க்கிறது. ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி காரில் ரூ.40 லட்சம் லஞ்சப் பணம்! அமைச்சர் பங்கா? என எதிர்க்கட்சிகள் கேள்வி!

திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சரவணகுமார் 40 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கியிருப்பது துறை அமைச்சருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு குற்றவாளிகளுக்கு திமுக ஏன் ஜாமின் கொடுத்தது? வழக்கை சிபிஐ விசாரிக்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்த பிறகு, சென்னை திரும்பும் வழியில் மதுரையில் விமான நிலையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கோடநாடு விவகாரம் பற்றி முரசொலி நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து கேட்கப்பட்டது.

DNA அடிப்படையிலான உணவுமுறை – மரபணுக்களின் வழிகாட்டுதலுடன் உடல் எடையைக் குறைக்கும் புதிய வழிமுறை!

இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியமாக இருப்பதற்கும், சரியான உடல் எடையைப் பராமரிப்பதற்கும் நாம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். இணையத்தைப் புரட்டினால் ஆயிரக்கணக்கான டயட் திட்டங்களும், பயிற்சிகளும் கொட்டிக் கிடக்கின்றன.

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கின!

தமிழகத்தில் காற்றதாழ்வு, காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நேற்று இரவு மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள.

கம்யூனிஸ்டுகளை அம்பேத்கர் வெறுக்கக் காரணம் என்ன? RSS பற்றி அம்பேத்கர் என்ன சொன்னார்? அரிய தகவல்களுடன் சிறப்புப் பார்வை!

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. RSS, கம்யூனிஸ்ட், இட ஒதுக்கீடு, பொது சிவில் சட்டம், சமஸ்கிருதம், பணமதிப்பிழப்பு ஆகியவை பற்றிய  சட்டமேதை அண்ணல் அம்பதேகரின் பார்வையை காணலாம். அத்துடன் அம்பேத்கர் பற்றிய அரிய சில தகவல்களும் உங்களுக்காக.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! புரோக்கராக செயல்படும் மூதாட்டி! போலீஸிடம் சிக்கிய தம்பதி!

பிறந்த மூன்று நாட்களேயான குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்திச் சென்ற தம்பதியினரை ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். கண்காணிப்பு குறைபாடே திருட்டுக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பலந்தை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி சுஜாதாவுக்கு மூன்று நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு பிரிவுக்குச் சென்று அந்தக் குழந்தையை திருடிக்கு கொண்டு இருவர் தப்ப முயன்றுள்ளனர்.

Also Read : நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!

குழந்தை காணவில்லை என்பதை உடனடியாக உணர்ந்த சுஜாதா கூச்சல் போட்டுள்ளார். குழந்தையைத் திருடிய தம்பதி, மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறி பேருந்து நிலையத்திற்கு செல்ல முற்படும்போதே, சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், குழந்தையைத் திருடி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக விஷ்ணுகாந்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், குழந்தையை திருடிச்சென்ற தம்பதியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்களது பெயர் ராமு – சத்யா என்பது தெரியவந்தது. மகப்பேறு வளாகத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும், குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனை வளாகத்தைவிட்டு சென்றுவிட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் போலீஸாரிடம் சத்யா தெரிவித்துள்ளார். அந்த மூதாட்டி யார்? குழந்தையை திருடி விற்கும் புரோக்கராக அவர் செயல்படுகிறாரா? ராமு – சத்யா தம்பதியின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார்? என்பதை போலீஸார் விசாரிக்கின்றனர். மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உரிய கண்காணிப்பு இல்லாததே, குழந்தையை எளிதாக திருட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

antalya bayan escort