உடலை ரீசார்ஜ் செய்வதற்கு தூக்கம் அவசியம். வாஸ்து பரிந்துரைக்கும் வண்ணங்களுடன் படுக்கையறைகளை சீரமைப்பது உங்கள் வாழ்க்கையை சரியான திசையில் வழிநடத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கும். படுக்கையறை வண்ணங்களை வாஸ்து அடிப்படையில் தேர்ந்தெடுப்பது நேர்மறை ஆற்றலையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கு முக்கியமானது. வாஸ்துப்படி படுக்கையறைகளுக்கு நீலம், இண்டிகோ, பச்சை, மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு, சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை உள்ளிட்ட வண்ணங்களை தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் டிஜிட்டல் புத்தகம்! Know what’s better for your heath? – a digital book or a print book?
3.00 Minute(s) Read : மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை சுறுசுறுப்பாக்கி, கற்பனைத் திறனை மேம்படுத்தி, அறிவை வளர்ப்பதுதான் வாசிக்கும் பழக்கம். புத்தகங்கள் ஒரு நபரின் தனிப்பட்டக் கொள்கைகளையும் மாற்றும் திறன் படைத்தது. கோபம், சோர்வு, மன அமைதியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்த நூல் வாசிப்பு சிகிச்சையாகவே கையாளப்படுகிறது. புதிய புத்தகங்களிலிருந்து வெளியாகும வாசமே அலாதியானது.
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு! ஐந்து பேர் யார், யார்? அவர்களது பின்னணி என்ன?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பொருளாதார நிபுணர்கள் பற்றி பார்க்கலாம்.
மண்பாண்டத் தொழிலைக் காப்பாற்ற சிறப்புப் பொருளாதார மண்டலம்! பாரம்பரியத்தை காக்குமா தமிழக அரசு?
மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் செய்தலாகும். ஆனால் உலோக பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மண்பாண்டங்கள் காணாமல் போய்விட்டது. கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே காணக்கூடிய அரியதொரு பொருளாக மண்பாண்டங்கள் மாறிவிட்டன.
எந்தெந்தத் தேதிகளில், எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன், திமுக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது.
இந்தியாவில் முதல் முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
‘மக்களைத் தேடி மருத்துவம்‘ திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
