வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! கிரண் பேடிக்கு எதிராக மல்லுக்கட்டும் புதுச்சேரி பாஜக!

0
7

கொரோனா தொடர்பான புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் கருத்து மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களின் பொறுப்பற்ற தன்மையே கொரோனா பரவலுக்கு காரணம், விநாயகர் சதுர்த்தியன்று பொருட்கள் வாங்க மக்கள் கடை வீதிகளில் திரண்டார்கள், வரி கூட செலுத்தாதவர்கள் இலவச சிகிச்சையை எதிர்பார்க்கிறார்கள், இவர்கள் செய்யும் தவறுகளுக்காக அரசு செலவிட வேண்டுமா என்ற ரீதியில் கிரண்பேடி சரமாரியாக மக்களை விமர்சித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்து, அவரை ஆளுநராக நியமித்த மத்திய அரசு மீதும், புதுச்சேரி பாஜக மீதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என நேற்று முன்தினம் (23-08-2020) வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது. இது வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என அழுத்தமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read:

https://velsmedia.com/kiran-bedi-expressed-regret-that-some-people-expect-the-government-to-provide-treatment-free-of-cost/

வேல்ஸ் மீடியா செய்தியை ஆமோதிக்கும் விதமாக, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கிரண்பேடி மக்களை நேரடியாக குறைகூறுவதை தவறு என்று பாஜக சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஏழா, நடுத்தர மக்கள் பல மாதங்களாக வருமானம் இன்றி தடுமாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், உங்களுக்கான உலவச சிகிச்சை மறுக்கப்படும் என்ற ஆளுநரின் அறிவிப்பு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கிக் கொண்டிருக்கும்போது, இவலச சிகிச்சையை மறுத்தால் என்ன என  ஆளுநர் கூறுவது, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதரானது. இலவச மருத்துவத்துக்கு பணம்  கட்ட வேண்டும் என்று சொல்வது ஆளுநரின் கருத்தாக இல்லை, கிரண்பேடி என்ற தனிப்பட்ட நபரின் கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சாமிநாதன் கூறியுள்ளார்.
Subscribe to our channels on  YouTube  &   WhatsApp   &   Telegram