புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரானார் சிவா! கட்சித் தலைமை அதிரடி! தொண்டர்களின் கருத்தை பிரதிபலித்த வேல்ஸ் மீடியா!

0
281

ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளராக சிவா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் இந்த முடிவை நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்றுள்ளனர்.

புதுச்சேரி பிராந்தியத்தில், சிவா, எஸ்.பி. சிவக்குமார் ஆகியோரும், காரைக்கால் பிராந்தியத்துக்கு நாஜிமும் அமைப்பாளர்களாக இருந்து வந்தனர். ஆனால், புதுச்சேரி மாநில திமுகவை ஒரே தலைமையின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வந்தனர்.

புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டுமென்றால் இந்த மாற்றம் அவசியம் என்பதும் அவர்களது வற்புறுத்தலாக இருந்தது. திமுக நிர்வாகிகளின் கருத்தை, கடந்த ஜுன் மாதம் 20-ந் தேதி வேல்ஸ் மீடியா செய்தியாக வெளியிட்டிருந்தது.

Also Read : – புதுச்சேரியில் ஆட்சி அமைக்க தயராகும் திமுக! ஒற்றை தலைமைக்கு வலியுறுத்தும் நிர்வாகிகள், தொண்டர்கள்!

வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலியாக, ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளராக சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கருத்துத் தெரிவித்த மூத்த நிர்வாகி ஒருவர், “கட்சித் தலைமை சரியான முடிவை எடுத்திருக்கிறது. ஒற்றை தலைமை, சரியான திட்டமிடல், அதற்கேற்ற களப்பணி என்பதே எங்களது இலக்காக உள்ளது. அடுத்த தேர்தலில் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைக்கும். அதற்கேற்ப சிவா திட்டமிடுவார். அனைவரையும் அரவணைத்து நன்றாக களப்பணி செய்யக்கூடியவர். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எங்களது எதிர்பார்ப்பை கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்ற வேல்ஸ் மீடியாவுக்கு நன்றிஎன்று கூறினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி மீதான ஈர்ப்பால் இளம் பருவத்திலேயே திமுகவில் இணைந்தவர் சிவா. படிப்பை முடித்து கட்சிப் பணியில் ஈடுபட ஆரம்பித்த அவர், படிப்படியாக வளர்ந்து மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ஆனார். தற்போது 53 வயதாகும் சிவா, 2015-ம் ஆண்டு புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளராக திமுக தலைமையால் நியமிக்கப்பட்டார்.

1996-ம் ஆண்டு முதன்முறையாக சட்டப்பேரவைக்கு அவர் தேர்வானார். பிறகு, 2001, 2006, 2016, 2021 என, தற்போது 5-வது முறையாக எம்.எல்..வாக உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 6 திமுக எம்.எல்..க்கள் உள்ளனர். இவர்களில் சிவா உள்பட 4 பேர் புதுச்சேரி திமுக தெற்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சிவா அறிவிக்கப்பட்டார். இவரது களப்பணியை அங்கீகரித்து, மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே, ஒருங்கிணைந்த மாநில திமுக அமைப்பாளராக சிவாவை திமுக தலைமை நியமித்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry