மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. அணை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
Also Read : தமிழகத்தை உலுக்கும் புள்ளி விவரம்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு! தற்கொலையில் 2-வது இடம்!
கரூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக அமராவதி ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 01.09.22 காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 14570 கன அடி தண்ணீர் கரூர் நகரை கடந்து சென்று கொண்டுள்ளது.
இந்த தண்ணீர் முழுவதும் திருமுக்கூடலூர் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து செல்கிறது. நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை எளிதாக மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. #Karur #TNNews #velsmedia #rain pic.twitter.com/gHm3uHFReu
— VELS MEDIA (@VelsMedia) September 1, 2022
இதனிடையே, கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி, பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.
Also Watch : 8 வழிச்சாலை | திமுகவின் பல்டிகள் 🤣 | ஸ்டாலின் அன்று பேசியது; எ.வ. வேலு இப்போது பேசுவது
திருமாநிலையூர் அமராவதி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை குடம், கயிறு, லாரி டயர், டியூப் ஆகியவற்றை கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது என்று செயல்முறையில் காண்பிக்கப்பட்டது.
– ஆனந்தகுமார், செய்தியாளர், கரூர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry