Wednesday, March 18, 2026
Home Blog Page 135

சொன்னபடி D.A. அறிவித்ததற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி பாராட்டு! நம்பிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை உணர்வினை ஏற்படுத்துகின்ற வகையில் 01.07.2023 முதல் நிலுவைத் தொகையுடன் 42% சதவீதத்திலிருந்து 46% சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் விசா இன்றி இலங்கை செல்லலாம்! சுற்றுலா வருவாயைப் பெருக்க இலங்கை அரசு திட்டம்!

இலங்கை நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வண்ணம் புதிய அறிவிப்பை அந்நாட்டு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லாதது ஏன்? முட்டையை காண்பிக்கும் கூமுட்டை! வறுத்தெடுத்த டி. ஜெயக்குமார்!

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், “திமுக ஆட்சியில்  சிறுபான்மையினர் அச்ச உணர்வுடன் மனக்குமுறலோடு வாழ்கின்றனர். சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து அதனை இன்று வரை நிறைவேற்றவில்லை.

பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு! அதிமுக மீது பாய்ந்து பிராண்டுவதாக ஈபிஎஸ் சாடல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் பேசும்போது, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்தார்.

அதனால்தான், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அவற்றின் நிலை என்ன என்று நான் கேட்டேன். மேலும், கடந்த 29 மாத கால விடியா திமுக ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் பாதிப்புகளை நீக்க விடியா திமுக அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சட்டமன்றத்திலும், ஊடகங்களிலும் கூறி வருகிறேன்.

Also Read : தெம்பு, திராணி, வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்! திமுகவை வெளுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

அம்மா அரசில் தொடங்கப்பட்டு, தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சில முக்கியத் திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன மானியம், பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தும்;

மாநில நிதியில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் உட்பட ஓராண்டுக்குள் நிறைவேற்றி இருக்கக்கூடிய பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் இன்றுவரை இழுத்தடித்துக் கொண்டிருப்பது என்று தமிழக மக்களிடையே ஸ்டாலின் பெரும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருமுறை மின் கட்டண உயர்வு; சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு; குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டண உயர்வு; பால் பொருட்கள் விலை உயர்வு; அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு;

நில வழிகாட்டி மதிப்பு உயர்வு; பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு என்று தமிழக மக்கள் அனைவரது தினசரி வாழ்வையே புரட்டிப் போட்ட நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற 29 மாத கால ஆட்சியில் நிர்வாக ரீதியாக படுதோல்வியை சந்தித்து மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியதை நான் ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கிறேன். இதற்கு ஸ்டாலினின் பதில் என்ன?

Also Read : நாய்கள் கடிப்பதற்கு முன் என்னவிதமான சிக்னல் கொடுக்கும்? நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? Dog bite prevention!

அடுத்து, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; அதிகரித்து வரும் போதை கலாச்சாரம்; போதைப் பொருள் விற்பனை; 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் அதிக அளவு போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக சீர்கேடு; தமிழகமெங்கும் சர்வ சாதாரணமாக கூலிப் படையினர் போட்டி போட்டுக்கொண்டு, பொது வெளியில் கொடூர ஆயுதங்களால் கொலை செய்தல்; வழிப்பறி; நகை பறிப்பு; திமுக நிர்வாகிகள் காவல் துறையினரை மிரட்டுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள்;

சட்டமன்ற உறுப்பினர்கள் தொழில் துறையினரை மிரட்டும் வீடியோக்கள்; நில அபகரிப்பு; தனியாக வசிக்கும் முதியவர்கள் கொடூரமாகத் தாக்கப்படுதல் / கொலை செய்யப்படுதல் மற்றும் அவர்களது சொத்துக்களை கொள்ளையடிப்பது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் ஆகிவிட்டது. தமிழக மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறிய தமிழகக் காவல்துறை – இதற்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் பதில் என்ன?

ஆட்சிப் பொறுப்பேற்ற 29 மாத காலத்தில் விவசாயப் பெருமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், பெண்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் கெட்டப் பெயரை சம்பாதித்துள்ள நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் ஆவார்.

Also Read : முதலமைச்சர் வாக்குறுதிப்படி அகவிலைப்படி உயர்வினை உடனடியாக அறிவிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஸ்டாலின் குடும்ப ஊழல் பெருமையைப் பற்றி, அப்போதைய நிதியமைச்சர் பேசிய ஒலி நாடா சமூக ஊடகங்களில் வெளிவந்ததை வசதியாக மறந்துவிட்டார். மேலும், ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் சென்ற இலாகா இல்லாத அமைச்சரை, சென்னை உயர்நீதிமன்றமே தார்மீக ரீதியாக முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்தும், ஊழல் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்காதது கேலிக்கூத்தாக உள்ளது.

ஸ்டாலின், திருவண்ணாமலையில் அவரது கட்சியினரிடம் பேசும்போது, என்னை பச்சைப் பொய் பழனிசாமி என்று பேசியுள்ளார். பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் ஸ்டாலின். பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ கொடுப்பதாக அறிவித்தால், ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, எங்களுடைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும்;

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்டவற்றையும், அம்மாவின் அரசால் ஆரம்பிக்கப்பட்ட, நடைபெற்று வந்த மற்றும் முடிவுற்ற பணிகளையும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும், புதிதாக கட்டப்பட்ட பாலங்களையும், தமிழக நகரங்களில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகளையும் தான் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

Also Read : சிறை மருத்துவர், அதிகாரிகள் அடாவடி! கைதியை சிகிச்சைக்கு பரிந்துரைக்க லட்சக்கணக்கில் வசூல்!

ஸ்டாலினிடம், உங்களது 29 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், அதைப் பற்றி பேசாமல், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களிடையே பொய் பேசுகிறார்.

ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை. தான் வகிப்பது பெருமை மிக்க முதலமைச்சர் பதவி என்பதை மறந்து, என் மீதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் பாய்ந்து பிராண்டியிருப்பது, ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

சமூக நீதி, மாநில சுயாட்சி பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது! அதிகாரத்தை தட்டிக்கழிப்பதாகவும் பாமக சாடல்!

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். சில நாட்களுக்கு முன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ‘சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது, அதனால் வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் கூடுதலாக நடத்த வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் வழங்காமல் தீயணைப்புத்துறை இழுத்தடிப்பு! கோடிக்கணக்கணில் நஷ்டமாகும் என வியாபாரிகள் வேதனை!

தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்புத்துறை உரிமம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தெம்பு, திராணி, வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்! திமுகவை வெளுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கம் மக்களை ஏமாற்றும் வேலை, மக்களவைத் தேர்தல் வருவதால் இப்படிச் செய்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

antalya bayan escort