Wednesday, March 18, 2026
Home Blog Page 189

கரோனா புதிய திரிபு வீரியம் குறைவானது! கிளஸ்டர் பாதிப்பு இல்லை என அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறதா? என்பது குறித்த ஆய்வு இன்று நடைபெறுகிறது.

இண்டேன் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் அலட்சியப்போக்கு? Vels Exclusive

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இண்டேன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மெத்தனப்போக்கே இதற்குக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

பினாமி நிறுவனங்களை போட்டியாளராகக் காட்டி, நிலக்கரி சுரங்க ஏலத்தை எடுத்த அதானி! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி!

ஹிண்டன்பர்க் ஆய்வின் மூலம், அதானி குழுமத்துக்கும், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சிறிய அடிகார்ப்(Adicorp) என்ற நிறுவனத்துக்கும் உடனான தொடர்பு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிட முடியுமா? மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து பழிவாங்குவதாக விவசாயிகள் குமுறல்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த டெல்டாக்காரர்தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஆய்வு நடந்திருக்காது! காவிரி டெல்டா புதிய நிலக்கரி திட்டம் பற்றி அன்புமணி ராமதாஸ் காட்டம்!

காவிரிப் பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய நிலக்கரி திட்டங்களுக்கு, நிலத்தை அரசு கையகப்படுத்தித் தராது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடுகளைத் தடுக்க எங்களுக்கும் சீருடை வேண்டும்! காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் வேண்டுகோள்!

தமிழக காவல்துறையில், காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவணப் பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்பி, டிஐஜி, ஐஜி அலுவலகங்களில் ஏராளமான அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

antalya bayan escort