அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 152 பேர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீரசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மதம் மாற வற்புறுத்தும் ஆசிரியர்கள்! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு மாணவர்களிடம் அழுத்தம் கொடுப்பதால், தங்கள் குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
1 – 12ம் வகுப்புகளுக்கு ஃபுல் போர்ஷன்! முழுப் பாடத்திலிருந்தும் தேர்வு! பள்ளிக்கு செல்போன் எடுத்துவரத் தடை!
கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகச் செயல்படவில்லை. இதனால், 10-ம் வகுப்புக்கு 29 சதவீதமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 1-9ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.
UPI உடன் கிரெடிட் கார்டு இணைப்பு! சாதக, பாதகங்கள் என்னென்ன?
ஸ்வைப்பிங் மற்றும் ஆன்லைன் பேமன்ட்டுகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலையில், கிரெடிட் கார்டுகளையும் UPI-ல் இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.
மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எப்படி? ஆசிரியர் கூட்டணியின் அடுக்கடுக்கான யோசனைகள்!
மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எவ்வாறு?, தொடக்கக் கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்? அரசுப் பள்ளிகளின் தரத்தை எப்படி உயர்த்தலாம்? போன்றவற்றுக்கு சிறப்பான யோசனையை தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசுக்கு முன்வைத்துள்ளது.
பள்ளிகள் நாளை திறப்பு! 1450 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
கோடை விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் ஒருவாரத்திற்குப் பாடங்களுக்குப் பதிலாக புத்துணர்ச்சிப் பயிற்சிகள் வழங்கப்படும் என கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனால் மாணவ, மாணவிகளும் பள்ளிக்குச் செல்ல ஏதுவாக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
