புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்கிறது.
நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமானது! ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!
நாடு முழுவதும் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு! வாகனத்தை கவனமாகப் பராமரிக்காவிட்டால் சிக்கல்!
கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பதால் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் பார்த்துக்கொள்ளுமாறு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கட்சியா? இல்லை அடிமை சாசனமா? என வாரிசு அரசியல் பற்றி நிர்வாகி ஆவேசம்! கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலின்!
ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டாங்க என ஆதங்கப்பட்ட மூத்த நிர்வாகியை, மு.க. ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார். இது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா தடுப்பூசிப் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம்! அமித் ஷா திட்டவட்டம்!
தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.
பெட்டி தூக்கிக்கொண்டு குடும்பத்துடன் ஊர் ஊராக பிரச்சாரம் செய்யும் ‘ஸ்டாலின்’! ரேஸில் முந்தும் ‘எடப்பாடி பழனிசாமி’!
ஐ–பேக் வழிகாட்டுதலில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பிரச்சாரத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி ஆளாக சரியான பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் பிரச்சார களத்தில், அ.தி.மு.க. முன்னேறி வருகிறது.
பெட்ரோல் லிட்டர் ரூ.90-ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! கலால் வரியைக் குறைக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம்!
பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள், வணிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
