விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாமக-வில் டாக்டர் முத்துக்குமரன்? புதுச்சேரி மாநில அமைப்பாளர் பதவி கிடைக்க வாய்ப்பு!
வன்னியர்கள் ஆதிக்கம் மிகுந்த புதுச்சேரியில் பாமக இதுவரை வலுவாக கால்பதிக்க இயலாததற்கு மாநிலத் தலைமையே காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த முறை புதுச்சேரியில், இளைஞரிடம் கட்சியை ஒப்படைத்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்ய மருத்துவர் ராமதாஸும், மருத்துவர் அன்புமணி ராமதாஸும் திட்டமிட்டுள்ளனர்.
கொரோனாவை தடுக்கும் சிறந்த மாஸ்க் எது? Re Usable மாஸ்க் பாதுகாப்பானதா? வேல்ஸ் மீடியா சிறப்புப் பார்வை!
அன்றாடம் டிரஸ் அணிவதுபோல, மாஸ்க் அணிவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒருசிலர் முகத்தை மூடினால் போதும் என்ற நினைப்பில் கிடைக்கும் துணியில் மாஸ்க் தைத்து போட்டுக்கொள்கின்றனர். எந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்?, தொற்றிலிருந்து எந்த அளவு அது நம்மை காப்பாற்றும்?
திமுக ஒதுங்குகிறதா? ஒதுக்கப்படுகிறதா? கூட்டணியில் புகைச்சல்! காரைக்கால் நேரு மார்க்கெட் விவகாரத்தில் வெளிப்பட்ட மோதல்!
காரைக்காலில் பத்தரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நேரு மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய கட்டுமானத்துக்கு காரணமாக இருந்த காரைக்கால் பிராந்திய திமுக அமைப்பாளர் நாஜிம் பெயரை, ஆளும் கட்சி இருட்டடிப்பு செய்வதாக திமுக–வினர் குமுறுகின்றனர்.
ரேஷன் கடையில் அரிசி போடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! காரைக்கால் கல்வி அதிகாரியின் ‘அல்லி’ ராஜ்ஜியம்!
புதுச்சேரியில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை ரேஷன் கடையில் அரிசி போடும் பணியை செய்ய வைத்த மாநில அரசு, தற்போது, வார் ரூம் டூட்டி என்ற பெயரில், கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியை வழங்கியுள்ளது. அப்படியென்றால் மாணவர்களின் கல்வி…?
‘டீ கடை’யில் இன்டர்வியூ! பூத் ஏஜென்ட் முதல் வேட்பாளர் வரை தேர்வு! திமுக-வினரின் உரிமைகளை பறிக்கிறதா I-PAC?
திமுக–வுக்காக தேர்தல் வியூகம் வகுத்து வரும் ஐ–பேக் நிறுவனம், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய டீ கடையில்தான் இன்டர்வியூ நடத்துகிறது. அதேபோல், திமுக–வின் பூத் ஏஜென்ட் முதல் வேட்பாளர் தேர்வு வரை அனைத்தையும் செய்வது, செய்யப்போவது ஐ–பேக் நிறுவனம்தான்.
புதுச்சேரியில் ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லையா? தொடர்ந்து வீழ்த்தப்படும் காங்கிரஸ் கட்சியினர்!
எல்லா மாநிலங்களிலும் முன்விரோதம், அரசியல் கொலைகள் நடைபெறுவது தொடர்கதைதான். அந்த மாநிலங்களில் ஆளும் கட்யினர் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், கொலைகள் இயல்பானதாக மாறிவரும் புதுச்சேரியில், ஆளும் கட்சியினரே கொலையாவதுதான் அதிர்ச்சியான உண்மை.
