காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தார். தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பாலனுக்கு மட்டும் ரங்கசாமி முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? வெளி உலகுக்கு தெரியாத பரபரப்பு தகவல்கள்!
மறைந்தாலும், மறக்க முடியா மாமனிதனர் என்றுதான் பாலனை ரங்கசாமி போற்றிவந்தார். ரங்கசாமி, அவருக்கு அளித்த முக்கியத்துவம், சொந்த கட்சியினரைத் தாண்டி, புதுச்சேரியில் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மறைந்த பாலனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
சுகாதாரமான குடி தண்ணீருக்காக ஏங்கும் ஏம்பலம் தொகுதி மக்கள்! அமைச்சர் கந்தசாமியின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் அவலம்!
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட கரிக்கலாம்பாக்கம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் உடல் நலன் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தென் மண்டல அமைப்பாளராகிறார் மு.க. அழகிரி மகன்! துரைமுருகன், கனிமொழி பரிந்துரை!
மு.க. அழகிரி, தனிக் கட்சி தொடங்க உள்ளதாக பலவிதமான ஹேஷ்யங்கள் உலா வந்தாலும், அதற்கு சாத்தியமே இல்லை என்றே உறுதியாக நம்பப்படுகிறது. அதேநேரம், அவரது மகன் துரை தயாநிதிக்கு திமுக–வில் உயர் பதவி வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.
உ.பி.யில் நடந்தால் குற்றம்! ராஜஸ்தானில் நடந்தால் புனிதமா? இரட்டை வேடமிடும் காங்கிரஸ், திமுக!
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இதைவைத்து அரசியல் ஆதாயம் தேட விழுந்து புரளுகிறார் ராகுல்காந்தி. தென் இந்தியாவில் அவருக்கு தோள் கொடுக்கிறார் ஸ்டாலின்.
காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக? பாஜக – திமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு என்கிறார் பொன்னார்!
தற்போது இருப்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி எனவும், சட்டமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிமுக வழிகாட்டு குழுவில் மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு! செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் அதிருப்தி!
அதிமுக வழிகாட்டு குழுவில் கட்சியின் மூத்த உறுப்பினர்களாக செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
